உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 போகிறார்கள். இரு சாராரும் தமக்குள் தொடர்புகொள்ள இருசாரார்க்கும் தெரிந்த ஆங்கிலத்தையே பயன்படுத்திக் கொள்ளலாமே! தமிழகத்திலுள்ள சாதாரணப் பாமர மக்கள் எப்படி அகிலஉலகத் தொடர்பு கொள்ளப்போவதில்லையோ, அதுபோல வடநாட்டுத் தொடர்பும் அவ்வளவாகக் கொள்ளப் போவதில்லை. நிலைமை இவ்வாறு இருக்கும்போது, தமிழ கத்தில், திராவிடத்தில், இந்திக்கு எந்தவகையில் அவசியம் ஏற்படப் போகிறது. இந்தி, இந்தியாவில் பிற தனித்தனி மொழிகளைப் பேசும் மக்களைக் காட்டிலும் மிகவான மக்களால் பேசப்படுவதால், அதுவே இந்தியாவின் பொதுமொழியாக இருப்பதற்குத் தகுதி படைத்தது என்று சொல்லப்படுகிறது. மிகவான மக்களால் பேசப்படுகிறது என்பது ஒன்றுமட்டுமே பொதுமொழி ஆவதற் கான தகுதி அல்லவே. ஆசியாக் கண்டத்திலும், உலகிலும் சீனமொழி மற்றமொழிகள் எல்லாவற்றைக் காட்டிலும் மிகவான மக்களால் பேசப்படுகிறது என்ற காரணத்துக்காக, அது ஆசிரியாக் கண்டத்திற்கோ, அல்லது உலகிற்கோ பொது மொழியாக ஆக்கப்படவில்லையே! ஆங்கிலந்தான் ஆசியாக் கண்டத்திற்கும் உலகிற்கும் பொதுமொழியாக இலங்குகிறது. அதே ஆங்கிலம் இந்தியத் துணைக்கண்டத்திற்கும் பொது மொழியாக விளங்கலாமே! தென்னாட்டவர்கள் வடநாட்டிற்குச் செல்ல வேண்டி நேரிட்டால், இந்திமொழி கற்றுக்கொள்வது கற்றுக்கொள்வது பயன்படுமே என்று சிலர் சொல்லக் கூடும். அப்படி அடிக்கடி போகவேண்டி நேரிடுகிற ஒருசிலர் வேண்டுமானால் இந்தியைத் தனியாக விருப்பப்படி கற்றுக்கொள்ளலாமே யொழிய, அதற்காகத் தென்னாட்டிலுள்ள எல்லோரும் இந்தியைக் கட்டாயமாகவும் அவசியமாகவும் கற்றுக்கொள்ள வேண்டியதில்லையே! மேற் சுட்டிக்காட்டிய காரணங்களைக் கொண்டு, எந்த வகையில் பார்த்தாலும், தமிழகத்துக்கோ, அல்லது திராவிடத்துக்கோ, இந்தி அறவே அவசியமற்ற மொழி என்பது புலப்படும். தமிழர்களோ அல்லது திராவிடர்களோ தங்கள்