56 தாய்மொழி - வட்டார மொழியோடு, ஏதேனும் பயன்படக் கூடிய மொழி ஒன்று கற்றுக்கொள்ளவேண்டும் என்றால், அது ஆங்கிலந்தான்; ஆங்கிலத்தைத்தவிர வேறு மொழியில்லை. இப்பொழுது ஆங்கிலம் ஆங்கிலேயர்களால் வற்புறுத்தித் திணிக்கப்படும் நிலையில் இல்லை. நாமே விரும்பி ஏற்றுக் கொள்ளும் நிலையில்தான் வைக்கப்பட்டிருக்கிறது. நாம் அதை இப்போது அடிமைத்தனத்தில் ஏற்றுக்கொள்ள வில்லை; விடுதலை உணர்வோடுதான் ஏற்றுக்கொள்கிறோம். அகில உலகப் பொது மொழியாக விளங்கும் ஆங்கிலம், நல்வாய்ப்பாகச் சென்ற சில நூற்றாண்டுகளாக நமக்கு நல்ல பழக்கமான மொழியாக ஆகிவிட்டது. எண்ணம், நடை, உடை, நடிப்புகளில் இந்தியைவிட ஆங்கிலமே நமக்கு நெருங்கிய பழக்கமான நண்பனாகிவிட்டது. உலக அறிவுச் செல்வங்கள் அத்துணையையும் நமக்கு அறிமுகப்படுத்து வதற்கு ஏற்ற சிறந்த நண்பன் ஆங்கிலமே யாகும். லார்டு மெக்காலே இந்தியாவில் பணிமனை அலுவலாளர் களைத் (office clerks) தயாரிப்பதற்காகவே ஆங்கிலத்தைப் புகுத்தினார் என்று பல அரைகுறை அரசியல்வாதிகள் தவறாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். லார்டு மெக்காலே 1837ஆம் ஆண்டில் எழுதிவைத்துள்ள குறிப்பில் கீழ்க்கண்ட வாறு குறிப்பிட்டுள்ளார். "நாம் இப்போதைய நிலையில் குருதி, நிறம், மனப் பான்மை ஆகியவற்றில் இந்தியர்களாகவும்; விருப்பங்கள், கருத்துக்கள் நடவடிக்கைகள், அறிவு ஆகியவற்றில் ஆங்கிலேயர்களாகவும் இருக்கக்கூடிய ஒரு வகுப்பினரை உருவாக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அவர் களைக்கொண்டு உள்நாட்டு மொழிகளை வளமுள்ளன வாகவும் அறிவியற்சொற்கள் நிறைந்தனவாகவும் ஆக்க வேண்டும். அவர்கள் மூலம் பாமரமக்கள் படிப்படியாக அறிவு பெறும்படி செய்ய வேண்டும்"
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/58
Appearance