இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
57 வட்டார மொழிகளை வளமுள்ளனவாகவும் வளர்ச்சி யுள்ளனவாகவும் செய்யவேண்டும்' என்ற எண்ணம் வார்டு மெக்காலே காலத்திலேயே இருந்துவந்திருக்கிறது என்பதை மேற்கண்ட குறிப்பால் இனிது அறிந்துகொள்ளலாம். திணிப்பது, இந்தியைத் தமிழகத்தில் - திராவிடத்தில் வடநாட்டவர் தம் ஆதிக்கத்தை என்றென்றும் நிலைநாட்டிக் கொள்வதற்குப் பயன்படுமேயல்லாமல், தென்னாட்டவர்க்கு இம்மி அளவு நன்மையும் அதனால் ஏற்படப்போவதில்லை; மாறாக, வடநாட்டிற்குத் தென்னாட்டவர் அடிமைப்பட வேண்டிய அவசியம் ஏற்படும். தமிழர்க்கு -திராவிடர்க்குத் தேவையானது ஆங்கிலமா? இந்தியா? என்றால், ஆங்கிலம்தான் என்று அழுத்தந்திருத்த மாக, ஆயிரம் தடவை வேண்டுமானாலும் கூறலாம். இந்தி அறவே அவசியமில்லை என்றும் அந்த அளவுக்குப் பகரலாம். - மன்றம் 15-6-'55 21.14