உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தே அறிவும் தெளிவும் விளைத்த எண்ணற்ற கட்டுரை சிலவற்றின் தொகுப்பாக அமைந்து வெளி வருவதே 'சிந்தனை மலர்கள்' என்னும் இந்நூலாகும். களுள், ஒரு நாவலரவர்களின் சிந்தனையிலே மலர்ந்தவை என்பது மட்டுமல்லாமல், கற்பாரின் சிந்தனையிலும் மலர்ச்சியையும் அறிவுமணத்தையும் அளவிலாது விளைவிக்கும் தமிழோட்ட மும், சக்தியோட்டமும் பெற்றவையும் இக் கட்டுரைக ளாகும். இவற்றை நூலாக்கி வெளியிட இசைவளித்த டாக்டர் நாவலர் அவர்கட்கு எங்கள் உளமார்ந்த நன்றி உரியதாகும். இவற்றைத் தேடித்தொகுத்து முறைப்படுத்தி நூலாக்கு வதற்குப் பெரிதும் துணையாக விளங்கிய அன்பர் கே.ஜி. இராதாமணாளன் அவர்களின் அயரா ஒத்துழைப்பிற்கும் எங்கள் நன்றி. இந்நூலினை அச்சிடும் பொறுப்பினைச் செவ்வையாக நிறைவேற்றித் தந்துள்ள அறிஞர் புலியூர்க் கேசிகன் அவர் களுக்கும், அச்சியற்றித் தந்துள்ள மாருதி அச்சகத்தார்க்கும் எங்கள் நன்றி. சிந்தனை மலர்களின் செந்தமிழ் நறுந்தேனைத் தமிழுலகம் விருப்புடன் உவந்தேற்றுக் களிமகிழ் வெய்தும் என்றும், நாவலரின் சிந்தனை மலர்களின் நறுமணம் நாடெல்லாம் மணந்து தமிழன்பர்களை மகிழ்விக்கும் என்றும் நம்புகின்றோம். வேண்டுகின்றோம். ஆவன உதவ அனைவரையும் -பாரி நிலையத்தார்