6.குடியாட்சி ஆட்சி முறைகளில் பல்வேறு வகைகள் உண்டு; அவற்றில் குடியாட்சி' முறை என்பது ஒன்று. 'உள்ளது சிறத்தல்' என்ற முறையின்படி, மனிதன் எவ்வாறு உயிரினங்களிலெல்லாம் முதிர்ந்த வளர்ச்சியின் தோற்றமாகக் காணப்படுகிறானோ, அதுபோல, ஆட்சிமுறை களிலும் 'உள்ளது சிறத்தல்' என்னும் தத்துவத்திற்கு ஏற்ப, குடியாட்சி முறை என்பதும் என்பதும் முதிர்ந்த வளர்ச்சியின் ஒரு தோற்றமாகத் திகழ்கிறது! 'தடியாட்சி’ காட்டுமிராண்டிக் காலத்தில் - அதாவது, மனிதன் நாகரிகச் செம்மையும் பண்பாட்டு மேம்பாடும் பெறாதிருந்த காலத்தில் - தடி தூக்கிய வல்லாண்மையுடையவன், மற்றவர் களைத் தன் தடியின் வலிமையால் அடக்கி ஆண்டான்; அவன் எதைச் சொல்லுகிறானோ அதுதான் விதி; அவன் எந்த வழியைக் காட்டுகிறோனோ, அது தான் சட்டம்; அப்படிப் பட்ட ஆட்சியை, 'தடியாட்சி' என்பார்கள்! ‘கும்பலாட்சி’ காடுகளிலும் - ஆற்றங்கரை யோரத்திலும் கூட்டங் கூட்டமாக வாழ்ந்த மக்கள், தம்மில் யாருக்கும் யாரும் கட்டுப் படாமல் - அதே நேரத்தில், எல்லாரும் எல்லா ரையும் அடக்கி ஆள முயன்றார்கள். இதை, கும்பலாட்சி (Mobocracy) என்று கூறுவார்கள்!
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/60
Appearance