59 'சிறு குழுவாட்சி’ நாளடைவில் வலிமை பெற்றசிலர், குறிப்பிட்ட இடத்தில் சேர்ந்து வாழ்ந்த தன்மையாலும் சேர்ந்து வேட்டையாடிய முயற்சியாலும் -சிறு குழுவினராக ஆகித் தம் வலிமையாலும் தந்திரத்தாலும் சூது சூழ்ச்சியாலும் பிற மக்களை அடக்கி ஆண்டனர்; இதனை, 'சிறு குழுவாட்சி' (Gligarchy) என்று குறிப்பிடுவார்கள்! செல்வராட்சி' செல்வச் செழிப்புடையவர்களெல்லாம், தம் செல்வச் செருக்கால் ஒன்று சேர்ந்துகொண்டு - செல்வத்தின் வலிமை யையே அடிப்படையாகக் கொண்டு மற்ற எளியவர்களை யெல்லாம் அடக்கி ஒடுக்கி ஆண்டார்கள்; இதனைச் 'செல்வ ராட்சி' (Plutocracy) என்று சொல்லுவார்கள். 'சாதியாட்சி' - ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள், எப்படியோ ஆதிக்க வலிமையை - பிறப்புரிமை பேசியும், இடத்துரிமை பேசியும், வாழ்வுரிமை பேசியும் பெற்றுக்கொண்டு, மற்ற மற்றச் சாதியினரை அடிமைப்படுத்தி அடக்கி ஆண்டனர்; இதனைச் 'சாதியராட்சி' (Castocracy) என்று கூறுவார்கள்! ‘சமயத்தவராட்சி’ ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்தவர்கள், தாங்கள் தாம் கடவுளின் முழுமுதலான வாரிசு' என்றும், தாங்கள் மட்டுமேதான் கடவுளால் அனுப்பிவைக்கப்பட்டவர்" என்றும் கூறிக்கொண்டு - அதன்மூலம் ஆதிக்க நிலையை ஏற்படுத்திக் கொண்டு - மற்றச் சமயத்தினரை அடிமைப்படுத்தி ஆண்டனர்; இதனை, 'சமயத்தவராட்சி' (Theocracy) என்று அழைப் பார்கள்! 'உயர் குழுவினர் வல்லாட்சி' ஒரு குறிப்பிட்ட பிரிவினர், தாங்கள்தாம் 'சமூகத்திலே உயர்ந்தவர்கள்' என்றும், 'எல்லாவகையிலும் தங்களைவிட
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/61
Appearance