00 1 உயர்ந்தவர்கள் எவரும் இல்லை' என்றும் கூறிக்கொண்டு- ஆதிக்கத்தைப் பற்றிக்கொண்டு-பிறரை அடக்கி ஆண்டனர்; இதனை, உயர் குழுவினர் வல்லாட்சி' (Aristocracy) என்று உரைப்பார்கள்! 'கோனாட்சி' வீரத்தின் மூலமோ - விவேகத்தின் மூலமோ-சூதின் மூலமோ - சூழ்ச்சியின் மூலமோ - எப்படியோ அரசைக் கைப்பற்றிக்கொண்ட ஒருவன், தன்னை 'அரசன்' என்று ஆக்கிக்கொண்டு, 'தனக்குப் பிறகு தன் மகன்தான் அரசனாகி ஆளுவான்' என்று முறை வகுத்துக்கொண்டு ஆண்டான்; இதனைக் 'கோனாட்சி' (Monorchy)என்று சொல்லுவார்கள். ‘குடிக்கோனாட்சி’ அரசனும் ஆளுவான்; குடிமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் ஆட்சிப்பொறுப்பை ஏற்று ஆளுவார்கள்; கோனாட்சி - குடியாட்சி ஆகிய இரண்டும் சேர்ந்து நடைபெறும் இந்த ஆட்சியை, 'குடிக்கோனாட்சி' (Demo - monorchy) என்று கூறுவார்கள். •குடியாட்சி' அரசு மக்கள் அமையும். அனைவர்க்கும் சொந்தமானதாக அதனை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆளுவார்கள்; அவர்களும் மக்களுக்காகவே ஆளுவார்கள். இதனைத்தான், 'குடியாட்சி' (Democracy) என்று அழைப்பார்கள்! ‘தனி வல்லாட்சி’ தனி மனிதன் ஒருவன், போர்ப்படையின் முழு வலிவை யும் துணையாக வைத்துக்கொண்டு, யாரையும் ஆட்சிப் பொறுப்பில் அண்டவிடாமல் தடுத்து நிறுத்திக்கொண்டும், ஆட்சியிலிருப்போரை அகற்றிவிட்டும், தானே - தன் விருப்பப் F
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/62
Appearance