61 படியே ஆள் முற்படுவான்; இதனை, தனி வல்லாட்சி' (Autocracy) என்று கூறுவார்கள்! பிளேட்டோ காலத்திலிருந்து காலத்திலிருந்து பேரறிஞர் அண்ணா காலம் வரையில், உலகில் தோன்றிய அறிஞர் பெருமக்கள் அனைவரும், மேற்குறிப்பிட்ட ஆட்சிமுறைகளில், குடியாட்சி முறை ஒன்றை மட்டுமே மிகவும் போற்றிப் பாராட்டி, வாழ்த்தி வரவேற்றுக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். குடியாட்சி முறையை நடைமுறைப் படுத்தும்போது, அதில் சிலபல குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. என்றாலும், ஆட்சிமுறைகள் அனைத்தையும் ஒருசேர வைத்து ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 'குடியாட்சி முறைதான் மிக மிகச் சிறந்த முறையாக விளங்குகிறது' என்பது தெளிவு. ‘சனநாயகம்' என்ற சொல், குடியாட்சி முறையைத்தான் குறிக்கின்றது! மக்கள் தலைமைபூண்டு ஆளுகின்ற ஆட்சியைத் தான், 'சனநாயக ஆட்சி' என்று கூறுகின்றார்கள். குடியாட்சி என்பதை ஆங்கிலத்தில் 'டெமோகிரசி, (Democracy) என்று குறிப்பிடுகிறோம். அந்தச் சொல் கிரேக்கமொழியிலிருந்து தழுவிகொள்ளப்பட்ட சொல்லாகும். கிரேக்க மொழியில், 'டெமோகிரிட்டியா' (Democritia) என்று வழங்குகிறார்கள்; அதற்குக் குடியாட்சி' என்று பொருள். 'டெமோஸ்' (Demos) என்பது குடிமக்களையும்; கிரிட்டியா' (Critia) என்பது அதிகாரத்தையும் குறிக்கும். 'குடிமக்களே அதிகாரம் வகிக்கும் முறை' எனப் பொருள் படுவதால், 'டெமோ கிரிட்டியா" என்ற அந்தச் சொல் குடியாட்சி என்பதைக் குறிப்பதாயிற்று. குடியாட்சி என்பதற்கு மிகச்சுருக்கமாகவும் தெளிவாக வும்- விளக்கமாகவும் இலக்கணம் வகுத்துத் தந்தவர்,
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/63
Appearance