உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 அமெரிக்க நாட்டின் குடியரசுத் ஆபிரகாம் லிங்கனே ஆவார்! தலைவராகத் திகழ்ந்த “மக்களுடைய, மக்களரீல், மக்களுக்கான ஆட்சியே குடியாட்சி" (Goverment of the people, by the people and for the people) என்று கூறி, நிலையான புகழ் பெற்றார் ஆபிரகாம் லிங்கன்! குடியாட்சியின் சிறப்பைப் பற்றிக் குறிப்பிடும்போது, பேரறிஞர் பெர்ட்ரண்டு ரசல் அவர்கள். குடியாட்சியைவிட ஒரு நல்லாட்சி முறை. மனித அறிவினால் கண்டுபிடிக்கப் படவில்லை" என்று குறிப்பிட்டுள் ளார். - தனி மனிதனுடையவும் -சில குழுவினருடையவுமான எதேச்சாதிகாரப் போக்குகளை, எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் எல்லா மென்முறைகளாலும் -நல் வழிகளாலும் எதிர்த்துப் போராடிப் போராடிப் பெற்ற பெரும் விளைவுதான், 'குடியாட்சி' என்பது! பிளேட்டோ, அரிசுடாட்டில் போன்ற கிரேக்க நாட்டுப் பேரறிஞர்கள், குடியாட்சிப் பண்புகளை விளக்கமாகவும்- தெளிவாகவும் எடுத்துரைத்தனர்! ஆனால், அந்தக் கருத்துக்கள், உலக நாடுகளில் நடை முறைப்படுத்தப்படும் பயிற்சியோ-பழக்கமோ ஏற்படவில்லை! வள்ளுவப் பெருந்தகையார் காலத்தில், அரசன் ஆளும் கோனாட்சி முறைதான் இருந்து வந்தது என்றாலும், குடியாட்சிப் பண்புகளை மிகவும் சிறப்பாக வற்புறுத்தியுள் ளார். ஆனால், குடியாட்சிமுறை அரசியல் அமைப்புத் தன்மை யில் இடம் பெறவில்லை! ஐரோப்பாக் கண்டத்தில், கி.பி. பதினான்காம் நூற்றாண்டிலிருந்து குடியாட்சிக் கருத்துக்கள் வேரூன்றத் தொடங்கின என்று கூறலாம். பரவலாக