03 கி. பி. பதினைந்தாம் நூற்றாண்டில், ஐரோப்பாக் கண்டத் தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி இயக்கமும், கிறித்தவ சமயத்தின் சீர்திருத்தவாதிகள் புரிந்த புரட்சியும், இங்கிலாந்தில் நடை பெற்ற தொழிற் புரட்சியும்- பொருளியல் புரட்சியும், அமெரிக்காவில் நடந்த விடுதலைப் போர்ப் புரட்சியும், பிரெஞ்சுப் புரட்சியும், இற்றைக் காலக் குடியாட்சிக்கு அடிப்படைகளாக அமைந்தன என்று கூறலாம். குடியாட்சிமுறை சிலபல சிறப்புக்குரிய தன்மைகளைக் கொண்டிருக்கிறது:- 1. மக்கள் எல்லாரும் சமமாக மதிக்கப்பட வேண்டி யவர்கள். 2. மக்களே நாட்டின் மன்னர்கள் ஆவார்கள். 3. சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம். 4. எல்லாருக்கும் வாதாட உரிமை உண்டு. 5. பெரும்பான்மையோர் கட்டுப்படுத்தும். 6. தனி மனிதனின் முடிவு எல்லாரையும் உரிமையும் - உடைமையும் 7. உயர்வும் மதிக்கப்படும். மனிதனுக்காகத்தான் அரசே அல்லாமல், அரசுக் காக மனிதன் அல்லன். 8. நீதித்துறை - நிருவாகத் துறை - பாராளுமன்றத் துறை - மூன்றும் உரிமை அடிப்படையில் தனித் தனியாக இருந்து, ஒன்றோடென்று தொடர்பு கொண்டு இயங்கும். 9. கருத்து வேறுபாட்டிற்கு மதிப்பு அளித்து முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும். 10. குறிப்பிட்ட காலவரையறையில் ஆட்சியை அகற்றவும், மாற்றி அமைக்கவும், மக்களுக்கு -> உரிமை உண்டு.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/65
Appearance