64 11. பாராளுமன்றத்தில், ஆளுங்கட்சி- எதிர்க்கட்சி என்ற இரண்டும் சம உரிமையில் இடம்பெறும். 12. ஒரு கட்சி அரசு ஏற்பட இடமில்லை. என்பன போன்ற கருத்துக்கள் குடியாட்சியின் தனிப் பண்புகளை உயர்த்துவனவாகும். உண்மைக் "எங்கு அரசு நிருவாகத்தில் எல்லா மக்களும் ஒரேமாதிரிப் பங்கு கொள்ள முடிகிறதோ - அங்கேதான் குடியாட்சியைக் காண முடியும்" என்று அறிஞர் அரிசுடாட்டில் குறிப்பிட்டுள்ளார். குடியாட்சி அரசில், குடிமக்கள் தத்தம் உரிமைகளைப் பெறவும் - நடைமுறைப்படுத்திக் கொள்ளவும் இடமிருப்பது போலவே, உரிமை ஒவ்வொன்றிலும் கடமைப் பண்பும். பொறுப்புணர்ச்சியும் இணைந்திருக்கின்றன என்பதை யாரும் மறந்துவிட லாகாது! குடியாட்சியின் சிறந்த கோட்பாடுகள் என்ன என்பதைப் போராசிரியர் சி. ஈ. எம். சோடு அவர்கள், 'பாராளுமன்றக் குடியாட்சிக் கோட்பாடுகள்' (The Principles of Parliment- ary Democracy) என்னும் நூலில், மிகத்தெளிவாக விளக்கிக் காட்டியுள்ளார்:- . 1. ஒவ்வொரு குடிமகனும் தனக்குத்தானே முடிந்த பொருள். 2. அரசானது, மனிதன் நலத்திற்கு ஆன ஒரு வழி; ஒரு வழி மட்டுமல்ல-ஒரே வழியுமாகும். 3. குடிமக்களுக்கு வேண்டியவற்றை வேண்டியவாறு பெறச்செய்யும் உரிமை படைத்தது குடியாட்சி அரசு. 4. சட்டங்களை எப்படி அமைப்பது - சமுகத்தை எப்படி நடத்துவது என்பதைக் குடிகளின் பிரதிநிதிகள் முடிவுகட்டுவர்.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/66
Appearance