65 5. ஆட்சிமாற்றம், அரசியலமைப்புச் சட்டத்திற் கிணங்க, வன்முறை இல்லாமல், குடிமக்களின் ஒப்புதலின் பேரிலேயே இருக்கவேண்டும். 6. ஏற்ற மக்கள், தாம் விரும்பியவாறு. தடையில்லாமல் சிந்திக்கவும். எழுதவும், படிக்கவும், நிலைமையைப் பெறவேண்டும். 7. ஆட்சியைச் சட்டத்திற்கு உட்பட்டுக் கண்டிக்க வும், எதிராக மாற்றுக்கட்சிகளை அமைத்துக் 8. கொள்ளவும். மாற்று ஆட்சியை நிறுவவும் யாருக்கும் உரிமை உண்டு. சட்டங்களை இயற்றும் சட்டமன்றமும், நீதியை வழங்கும் நீதி மன்றமும் தனித்தனியாக இயங்கவேண்டும்; ஒன்றையொன்று மதிக்கவும் வேண்டும். 9. சட்டம் கூறும் குற்றத்திற்கு அல்லாமல், வேறு எவரும் கைது செய்யப்படக் கூடாது. 10. ஒருவர் கைதான பின்னரும், ஆராயப்படாமல் சிறையில் அடைக்கப்படக் கூடாது. 11. 12. சுதந்திர நீதிபதிகளிடம் சட்டப்படி பாதுகாப்புத் தேட ஒவ்வொருவர்க்கும் உரிமை உண்டு. அரசு- பாராளுமன்றத்திற்குக் கட்டுப்பட்டது. பாராளுமன்றம் குடிமக்களுக்குக் கட்டுப்பட்டது. 13. அதிகாரம் மக்களிடமேதான் இருக்கும். மக்கள் தான் ஆளவேண்டும். இவைகள், குடியாட்சியைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புகின்ற ஒவ்வொருவரும், சிந்தனையில் பதிய வைத்துக் கொள்ளவேண்டிய சீரிய கோட்பாடுகளாகும். குடியாட்சிப் பண்பும் -முறையும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதைக் கூறவந்த பேரறிஞர் அண்ணா அவர்கள்,
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/67
Appearance