உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 "இங்குக் குடியாட்சி நல்ல பாதுகாப்புடனே இருப்பதாகக் கருதிக் கொண்டு அடங்கிவிடலாகாது. குடியாட்சி அத்துணைப் பாதுகாப்பான நிலையில் இல்லை. எனவே, குடியாட்சிமுறை தழைத்து ஓங்கிட, ஒவ்வொருவரிடமும் குடியாட்சி மனநிலை - மன உரம்- மனப்பாங்கு வளர வேண்டும்; எத்தகைய அறைகூவலையும் ஏற்கத்தக்க குடியாட்சி நல்லுணர்வை ஒவ்வொருவரும் பெறவேண்டும்." "குடியாட்சிமுறை நின்று நிலவுகிற முறையில் உலகம் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் (The world must be made safe for democracy)" என்று, அமெரிக்க நாட்டின் குடியரசுத் தவைராக இருந்த உட்ரோ வில்சன் அவர்கள் குறிப்பிட்டார்கள். குடியாட்சி முறை முழுக்கமுழுக்க என்றென்றும் நின்று நிலவுகிற முறையில், இந்தியா பாதுகாப்பாக ஆக்கப்பட வேண்டும்; அதுதான், இந்தியக் குடிமகன் ஒவ்வொரு வனுடைய கடமையும்-பொறுப்பும் ஆகும். -1976