7. காலங் காட்டும் கருவிகள் பண்டைத் தமிழர்கள் காலத்தைப் பெரும்பொழுது என்றும், சிறுபொழுது என்றும் இரண்டாக முறைப்படுத்தினர். பெரும்பொழுது என்பது ஒரு ஆண்டுக் காலத்தைக் குறிப்ப தாகும். சிறுபொழுது என்பது ஒரு நாட்பொழுதைக் குறிப்ப தாகும். பெரும்பொழுது கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என ஆறு வகைப்படும். ஒவ்வொரு காலமும் இரண்டு இரண்டு திங்கள்களின் கால அளவைக் கொண்டனவாகும். ஆவணி புரட்டாசித் திங்கள்களை உள்ளடக்கியதைக் கார்காலம் என்றும், ஐப்பசி கார்த்திகை இரண்டையும் உள்ளடக்கியதைக் கூதிர்காலம் என்றும், மார்கழி தை இரண்டையும் முன்பனிக் காலம் என்றும்,மாசி பங்குனி இரண்டையும் பின்பனிக்காலம் என்றும், சித்திரை வைகாசி இரண்டையும் இளவேனிற் காலம் என்றும், ஆனி ஆடி இரண்டையும் முதுவேனிற் காலம் என்றும் அழைப்பர். சிறுபொழுது வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறுவகைப்படும். ஒவ்வொரு சிறுபொழுதும் பத்துப்பத்து நாழிகைகளைக் கொண்டதாகும். காலை, நண்பகல், ஏற்பாடு மூன்றும் பகல் முப்பது நாழிகைகளைக் குறிக்கும்; மாலை, யாமம், வைகறை மூன்றும் இரவு முப்பது நாழிகைகளைக் குறிக்கும். . பொழுதைக் கண்டறிவதற்குப் பண்டைத் தமிழர்கள் இயற்கைக் கருவிகளையும், செயற்கைக் கருவிகளையும், பயன் படுத்தி வந்தனர்.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/69
Appearance