முகவுரை மனித வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு செயலிலும், மனிதனின் மனந்தான் முக்கிய சக்தியாக இயங்கி வருகிறது. று மனம் பல்வேறு நிலைகளில் நின்று தொழில்படுகின்றது. அந்த நிலைகளைத் தனித்தனிப் பெயரிட்டு அழைக்கிறோம். 'உள்ளம்', 'அகம்'. அறிவு', 'சித்தம்'. 'சிந்தனை' 'நெஞ்சம்', 'இதயம்' என்று பல பெயர்கள் பயன்படுத்தப் படுகின்றன. ஐம்பொறிகளின் மூலம் உணர்வுகளையும், உண்மைகளை யும், கருத்துக்களையும் மனமானது உள்ளே வாங்கிக் கொள்ளுகின்ற தொழிலில் ஈடுபடும்போது, அதனை 'உள்ளம்' என்று குறிப்பிடுகிறோம். உள்ளத்தால் வாங்கிக் கொள்ளப்படுபவைகளை மனமானது அடக்கிவைத்துக் கொள்ளுகின்ற தொழிலில் ஈடுபடும்போது அதனை அகம் என்று சொல்லுகிறோம். மனமானது அறிதல் தொழிலில் முனைந்து ஈடுபடும்போது, அதனை ‘அறிவு’ அல்லது 'சித்தம்' என்று கூறுகிறோம். மனமானது ஆராயும் தொழிலில் அல்லது சிந்திக்கும் தொழிலில் ஈடுபடும்போது, அதனைச் 'சிந்தனை' என்று பகர்கிறோம். மனமானது உணரும் தொழிலில் ஈடுபடும்போது, அதனை 'நெஞ்சம்' அல்லது ‘இதயம்' என்று குறிப்பிடுகிறோம். இன்பம் - துன்பம் இரண்டும் மனநிலையைப் பொறுத்துத்தான் அமைகின்றன. இன்பத்தை ஏற்றுக் கொள்ளுகின்ற மனந்தான் துன்பத்தையும் தாங்கிக்கொள்ள
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/7
Appearance