68 நள்ளிரவில் கோழி கூவும். கோழியின் கூவுதலைக் கேட்டவுடன் யாமப்பொழுது வந்துவிட்டது என்று அறிந்து கொள்வார்கள். யாமத்தில் கூவுகின்ற காரணத்தினாலேயே, அத்தகைய கோழிக்கு, 'யாமக்கோழி' என்று பெயர். காக்கை கரைவதை வைத்துக்கொண்டு, வைகறைப்பொழுது வந்து விட்டது என்று தெரிந்து கொள்வார்கள். கோட்டானின் கூவுதலைக் கேட்டவுடன், மாலைப்பொழுது போய், யாமப் பொழுது துவங்கிவிட்டது என்று புரிந்து கொள்வார்கள். பறவைகள் நீர்நிலைகளை விட்டும், காடு கழனிகளை விட்டும் கூட்டங்கூட்டமாகத் தம் கூடுகளை நோக்கிப் பறந்து செல் வதைப் பார்க்கும்போது, எற்பாடு நீங்கி மாலைப்பொழுது வந்துவிட்டதை உணர்வர். பண்டைத் தமிழர்க்குப் பொழுதினைப் புலப்படுத்து வதற்குப் பூக்கள் பெரிதும் பயன்பட்டு வந்திருக்கின்றன. அவைகள் மலர்வதும், கூம்புவதும், வாடுவதும், உதிர்வதும் ஒவ்வொருவகைப் பொழுதினைப் புலப்படுத்தக் காரணமாக இருந்திருக்கின்றன. இதுகாரணம் பற்றித்தான், பொழுதின் முகமலர்வுடையது பூவே' என்னும் இலக்கணமும் எழுந் துள்ளது. மக்கள், காலையில் கண் மலர்ந்து எழுந்தவுடன், உலகெங்கும் பூக்கள் மலர்ந்திருப்பதைக் காண்கிறார்கள். மரங்களும்,செடிகளும், கொடிகளும், நீர்நிலைத் தண்டுகளும் பலவண்ணப் பூக்களைத் தாங்கி நிற்கின்றன. இதுகாரணம் பற்றித்தான் தமிழ்ச் சான்றோர் உலகைப் ‘பூ' என்று அழைத்தார்கள் போலும்! . ஒவ்வொருவகை மலர்கள் ஒவ்வொரு காலத்தில் பூக்கத் தொடங்குகின்றன. அந்தந்த மலர்களைக் கொண்டு அந்தந்தக் காலத்தைக் கணிக்க இயற்கையில் முடிகிறது. அது போலவே, ஒவ்வொரு வகை மலர்கள் ஒவ்வொரு பொழுது மலர்கின்றன. அப்படி மலரும் அந்தந்தப் பொழுதை அறிந்து கொள்ள முடிகிறது. பூக்களைக் கொண்டே பெரும்பொழுதை
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/70
Appearance