உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 யும் சிறுபொழுதையும் கணக்கிடுவதில் நாகரிகம் முதிர்ந்க் பண்டைத் தமிழர்கள் கைதேர்ந்தவர்களாக இருந்து வந்திருத கின்றனர். இந்தக் காலத்திலுள்ள மரநூல் வல்லுநர்கள்கூட, குறிப்பிட்ட காலத்திலும், குறிப்பிட்ட பொழுதிலும், குறிப்பிட்ட மலர்கள் மலர்கின்றன என்பதை ஆராய்ச்சி வடிவில் தெள்ளத்தெளியக் கண்டறிந்து வைத்துள்ளனர். காசிப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த திரு. எஸ்.என்.கே. என்பார் பல ஆண்டுகளுக்கு முன்பு, 'மலர்க் கடியாரம் (The Floral Clock) என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதினார். அந்தக் கட்டுரையில், குறிப்பிட்ட சில மலர்கள் எந்த எந்த நேரத்தில் மலர்கின்றன என்பதை அறுதியிட்டுக் கூறியுள்ளார். தாமரை மலர் கதிரவன் எழும் வைகறைப் போதிலும், சண்பக மலர் காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள்ளாகவும், வாழைப்பூ மாலை ஐந்து மணியிலிருந்து ஆறுமணிக்குள்ளாகவும், பவழமல்லிகைப்பூ மாலை மணியிலிருந்து ஏழுமணிக்குள்ளாகவும்; மல்லிகை இரவு ஏழுமணியிலிருந்து எட்டுமணிக்குள்ளாகவும் கின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆறு மலர் மலர் 'பொழுதை, அதாவது 'போதை அறிவிக்கக் காரண மாக இருப்பதால்தான், மலரும் பக்குவத்திலிருக்கும் முதிர்ந்த அரும்பைப் 'போது' என்று பெயரிட்டுப் பண்டைத் தமிழர் அழைத்தனர் போலும்! மலர் பெரும்பொழுது உணர்த்து வதற்கு அறிகுறியாக இருந்ததால்தான், அதனை 'நாள்' என்று அழைத்தனர் போலும்! பண்டைத் தமிழர் ஞாயிறு இருக்கும் இடம் நோக்கிப் பகற்பொழுதின் நாழிகைகளையும், உடுக்களும் திங்களும் இருக் கும் இடம்நோக்கி இராப்பொழுதின் நாழிகைகளையும் கணக் கிட்டனர். உடுக்களின் அமைப்பையும், அவற்றினிடையே திங்கள் தங்கும் இருப்பையும் நோக்கித் 'திங்களை'க் கணக்கிட்டு வந்தனர். திங்களைக் கொண்டு கணக்கிடப்பட்ட