உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தால், 'மாதம்' என்பது, தமிழர்களால் 'திங்கள்' என்று அழைக்கப்படுகிறது. கதிரவனையும்,திங்களையும் முகிற்கூட்டங்கள் மறைத்து விடும் நேரத்தில், பொழுதைப் புலப்படுத்தப் பல்வேறு வகைப் பூக்கள் பயன்பட்டு வந்திருக்கின்றன. பண்டைத் தமிழர்கள், பூக்கள் மலர்வதைக் கொண்டு பொழுதுகளை அறிந்து கொண்ட குறிப்புக்கள், சங்க இலக்கியங்களில் ஆங்காங்கு காணப்படுகின்றன. . கூதிர்காலம்,எங்கும் மப்பும் மந்தாரமுமாக இருக்கின்றது. கதிரவனின் இருப்பிடமோ, வெளிச்சமோ அறவே தெரிய வில்லை. இல்லற மகளிர் இரவு வருவதற்கு முன்பே வீட்டில் விளக்கேற்றி வைக்க எண்ணுகிறார்கள். 'மாலைப் பொழுது வந்துவிட்டதா? நாழிகை என்ன?' என்பது தெரியவில்லை. அதனால், மகளிர், வீட்டின் அருகே உள்ள பிச்சியின் அரும்புகளைப் பறித்துவந்து பூந்தட்டிலே வைக்கின்றனர். அவை சிறிது நேரத்தில் இதழ்விரித்து மணம்வீசத் தலைப்படு கின்றன. பிச்சியின் அரும்புகள் மலர்ந்தவுடனே, மாலைப் பொழுது வந்துவிட்டது என்பதை அறிந்துகொண்டு, மகளிர் விளக்கேற்றி வைத்து, நெல்லும் மலரும் தூவி, ஒளியை வழிபடுகின்றனர். இதனைப் பத்துப் பாட்டில் ஒன்றான 'நெடுநல் வாடை' அழகுற விளக்கிக் காட்டுகின்றது. மடவரல் மகளிர் பிடகைப் பெய்த செவ்வி அரும்பின் பைங்காற் பித்திகத்து அவ்விதழ் அவிழ்பதம் கமழப் பொழுதறிந்து இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது மல்லல் ஆவணம் மாலை அயர்... (மென்மையையுடைய (39-44) பெண்கள் பூந்தட்டிலே வைத்த. பக்குவத்தையுடைய, அரும்பையுடைய பிச்சியின் அழகிய இதழ்கள் மலரும் பருவத்திலே