71 மணம்வீச, அதனால் பொழுதை உணர்ந்து, இரும்பி னால் செய்த விளக்கில், எண்ணெயால் ஈரமான திரியைக் கொளுத்தி, கொளுத்தி, நெல்லும் மலரும் தூவிக் கைதொழுது வணங்கி, வளப்பம் மிக்க கடைத்தெரு மாலைப் பொழுதைக் கொண்டாட இதனால் பிச்சிப்பூ மாலைப் பொழுதை அறிவிக்கும் ஒரு கருவியாக இருந்து வந்திருக்கிறது என்பதை உணரலாம். தாமரை. கதிரவனின் தோற்றத்தையும், அல்லி மதியத்தின் தோற்றத்தையும் பொதுவாக உணர்த்துவனவாகும். தாமரை வைகறைப்போதில் மலர்ந்து மாலைப்போதில் குவியும்; அல்லி மாலைப்போதில் மலர்ந்து வைகறைப் போதில் குவியும். இதனால்தான் தாமரையைப் 'பகலரசி' என்றும், அல்லியை 'இரவரசி' என்றும் கூறுவர். நெய்தல் பூ வைகறைப்போதில் மலர்கின்ற மலராகும். இதனைத் திருமுருகாற்றுப்படை ஆசிரியர் நக்கீரனார் "வைகறை கட்கமழ் நெய்தல் ஊதி' என்று உணர்த்துகிறார். சூரிய காந்தி என்னும் விரிந்து பரந்திருக்கும் பூஞாயிறு செல்லுகிற பக்கம்நோக்கித் திசைதிரும்பி நிற்கும். அந்தப் பூ நோக்கும் திசையில் ஞாயிறு இருக்கும் என்று ஊகித்தறிந்து கொள்ளலாம். முன்பகலுக்கும் பின்பகலுக்கும் வேறுபாடு தெரியாமல் மப்புச் சூழ்ந்த நேரத்தில் நாழிகையையும் பொழுதையும் கணக்கிட்டுக் கொள்ளச் சூரிய காந்தி உதவும். என்று சூரிய காந்தியைப் போலவே நெருஞ்சி மலரும் பரிதியை நோக்கித் திசைதிரும்பி நிற்கும் மலராம். "நெருஞ்சிப் பசலை வான்பூ. ஏர்தரு சுடரி னெதிர்தந் தாங்கு" புறநானூறும், "சுடரொடு திரிதரும் நெருஞ்சி" அகநானூறும் குறிப்பிடுவதைக் காணலாம். என்று அந்திக் காலத்தில் மலரும் காரணத்தாலேயே ஒருவகை மலர், "அந்தி மந்தாரை" என்று அழைக்கப் பெறுகின்றது. அதுபோலவே, நள்ளிருளில் மலரும் ஒருவகை மலர்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/73
Appearance