72 "இருவாட்சிப் பூ' (இருள்வாசி) என்றும், 'நள்ளிருள் நாறி" என்றும் அழைக்கப்படுகின்றது. பகலவன் மறையும் பொழுதுக்கு முன்னதாகிய எற்பாட்டில், அந்தி மந்தாரை மலர்கிறது. "வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப" என்று அகநானூறு குறிப்பிடுவதைக் காணலாம். முல்லைப்பூ மாலைப்பொழுதில் மலரும் மலராகும். இதனை, "முல்லை மலரும் மாலை" என்று குறுந்தொகை உணர்த்துவதன் மூலம் அறியலாம். முல்லை மலரைப்போலவே, செங்காந்தள் பூவும் மாலைப் பொழுதில் பூக்கும் மலராகும். மாலைப் பொழுது என்பது முப்பது நாழிகைக்குமேல் நாற்பது நாழிகைக்குள்ளாக. அதாவது ஏற்பாட்டிற்கும் யாமத்திற்கும் இடையில் அமைந்த பொழுதாகும். முல்லையும், செங்காந்தளும் மாலைப் பொழுதில் மலர்கின்றன என்ற உண்மையை, நற்றிணைப் பாடல் ஒன்று அழகுறத் தெரிவிக்கிறது. 'பல்கதிர் மண்டிலம் பகல்செய்து ஆற்றிச் சேயுயர் பெருவரைச் சென்றவண் மறையப் பறவை பார்ப்பு வயின் அடைய ..... முல்லை முகைவாய் திறப்பப் பல்வயிற் றோன்றி தோன்றி புதல்விளக் குறாஅ ஐதுவந் திசைக்கும் அருளில் மாலை" இதில் 'தோன்றி' என்பது செங்காந்தளைக் குறிப்பதாகும். இவைபோன்றே ஆம்பல், குருக்கத்தி, செம்முல்லை, பிடவு புன்னை போன்ற மலர்கள் மாலைப் பொழுதில் மலர்வன வாகும் என்று இலக்கியங்கள் உணர்த்துகின்றன. தாமரை, நெய்தல் முதலிய மலர்கள் மாலைப் பொழுதில் குவியும் மலர்களாகும்.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/74
Appearance