உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 நொச்சிப் பூ நள்ளிருளில் உதிரும் என்று குறுந்தொகை 138-ஆம் செய்யுள் குறிப்பிடுகின்றது. சிறுபொழுதுகளை உணர்த்த மலர்கள் பயன்படுவதைப் போலவே, பெரும்பொழுதுகளை உணர்த்தவும் மலர்கள் பயன் படுகின்றன. முல்லை, கொன்றை, கடம்பு,பிடவு, பிச்சி,குருந்து, தெறுழம்பூ முதலியன பூக்கத் தொடங்கிவிட்டன என்றால், கார்காலம் மந்துவிட்டது என்பதை உணர்ந்துகொள்ளலாம். முசுண்டையும், பீர்க்கும் கூதிர் காலத்தில் மலர்வதாக நெடுநல்வாடை உணர்த்துகிறது. அவரை, ஈங்கை, கருவிளை முதலியன முன்பனிக் காலத் தில் மலரும் என்றும்; பகன்றை பின்பனிக்காலத்தில் மலரும் என்றும்; அசோகு, கோங்கு,மா, பாதிரி போன்றவை இளவேனிற் காலத்தில் பூக்கும் என்றும்; இருப்பை, அதிரல் போன்றவை இளவேனில், முதுவேனில் ஆகிய இரு காலங் களிலும் பூக்கும் என்றும் இலக்கியங்கள் செப்புகின்றன. காலத்தோடு சேர்த்துப் பூக்களை உணர்த்தும் மரபு இலக்கியங்களில் திசுழ்கின்றது. 'கார்நறும் கடம்பு' என்று நற்றிணையிலும், "கார் நறுங் கொன்றை என்று புறநானூற்றிலும்; 'வேனிற் பாதிரி' என்று குறுந்தொகை யிலும், வேனில் அதிரல்' என்று அகநானூற்றிலும் கூறப்பட்டு உள்ளது. . மலைகளில் உள்ள வேங்கை மரங்கள் இளவேனிற் காலத்திற் பூக்கும் என்றும், வேங்கை பூப்பதைக் கொண்டு மலைவாழ் மக்கள் இளவேனிற்காலம் வந்துற்றதை அறிந்து, காதலன் காதலியரின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வர் என்றும் இலக்கியச் செய்திகள் கூறுகின்றன. மலையில் வளரும் குறிஞ்சி பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும் என்றும், அந்தப் பூ மலர்வதை வைத்துக் அ.-5