உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கொண்டு, மலை வாழ் மக்கள் தம் ஆயுட்காலத்தைக் கணக்கிடுவர் என்றும் சொல்லப்படுகிறது. பொழுதைக் கண்டறிவதற்குப் பூக்கள், ஞாயிறு, திங்கள், உடுக்கள் போன்ற இயற்கைக் கருவிகள் பயன்பட்டதைப் போலவே, பண்டைத் தமிழர்கள் செயற்கைக் கருவிகள் பலவற்றையும் பயன்படுத்தினர் என்றும் தெரியவருகிறது. பண்டைத் தமிழகத்தில் பொழுதை அளந்தறிவதற்கு 'கன்னல்' என்னும் ஒரு கருவியைத் துணையாகக் கொண் டிருந்தனர். நீர் நிறைந்த கலத்தின் அடியிலே துளையை இட்டு, அதன் வழியே ஒரே சீராக நீர் கசிந்து இறங்கும் நேரத்தைக் கொண்டு, நாழிகைகளைக் கணக்கிட்டு வந்திருக் கின்றனர். சிறுசிறு துளியாக நீர் ஒழுகிவந்த காரணத்தால் அந்தக் காலம் காட்டும் கருவியைக் "குறுநீர்க் கன்னல்' என்று வழங்கினர். அதனையே நாழிகை வட்டில்' என்றும் அழைத்தனர். அரசனுடைய அரண்மனையில் நாழிகையைக் கணக்கிட்டு அறிந்து, அவ்வப்போது பொழுதை அறிவிக்கும் பணியில் ஈடுபட்டோர், 'நாழிகைக் கணக்கர்' என்று அழைக்கப் பட்டனர். நாழிகைக் கணக்கர் குழிநீர்க் கன்னலின் துணை கொண்டு நாழிகையை அறிந்து கூறும் நிகழ்ச்சியை, 'முல்லைப்பாட்டு அழகுபட விளக்கிக் காட்டுகிறது. "பொழுதளந்து அறியும் பொய்யா மாக்கள் தொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய் நின் குறுநீர்க் கன்னல் இனைத்தென்று இசைப்ப" (பொழுது அளந்து அறியும் பொய் பேசாத வேலைக் காரர்கள், அரசனைத் தொழுது காணும் கையை உடையவர்களாய், வெளிப்படையாக வாழ்த்தி, அலைவீசுகின்ற நீரை எல்லையாக உடைய