75 உலகத்தை வெல்லும் பொருட்டுச் செல்லும் மன்னர் பிரானே, நீ செய்வதற்கு ஏற்றதென்று குறுநீர்க் கன்னல் சொல்லும் காலம் இன்ன அளவுடையது (இத்தனை நாழிகை என்று கூற) என்பதிலிருந்து அறியலாம்.) நீர்க்கன்னலைப் போலவே நீருகும் மாற்றாக மணலைப் பயன்படுத்தும் கன்னல்களும் இருந்திருக்கின்றன. 'காலேந்திரம் கடிகையாரம் போன்ற கருவிகள் காலத்தைக் காட்டும் கருவி களாக இருந்துவந்தன என்று பெருங்கதை என்னும் இலக்கியம் குறிப்பிடுகின்றது. "காட்டுத்தூ ரும் பெருத்துக் கண்டம் பதினாறக்கி நீட்டிக் கிடந்த போக நின்றது நாழிகை' என்ற முறையில் கதிரவனின் வெய்யிலில் விழும் நிழலைக் கொண்டும், நிழலை ஏற்படுத்தும் துரும்பி நிற்கும் பகுதியைக் கொண்டும் நாழிகைகள் கணக்கிடப்பட்டு வந்தன என்றும் தெரிய வருகிறது. 'எச்சில் துப்பிக் காயும் நேரம்', 'பாக்குவெட்டு நேரம் உலையில் கொதி வரும் நேரம்' போன்றவைகள் நேரத்தின் அளவைக் குறிப்பிட மேற்கொண்ட முறைகளாகும். பண்டைத் தமிழர்கள், காலத்தைக் காட்டும் கருவிகளாக இயற்கைக் கருவிகளையும் செயற்கைக் கருவிகளையும் எவ்வளவு பாங்குறப் பயன்படுத்திவந்தனர் என்பதிலிருந்து, அவரது நாகரிகச் செம்மையை நன்கு அறியலாம்.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/77
Appearance