8. சிலந்தி புராணம் அராக்னிடா என்னும் இனத்தைச் சேர்ந்தது சிலந்தி. சிலந்தி அல்லது எட்டுக்கால்பூச்சி இனத்துக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது என்பது ஒரு வேடிக்கையான கதை. வேடிக்கை மட்டுமல்ல; அதற்கு ஆதாரம் கிரேக்கப் புராணத்தில் இருக்கிறது. கிரேக்கப் புராணத்தில் ஒரு நூற்புக்காரியின் பெயர் அராக்கின். இவள் ஒருமுறை அத்தீன் என்ற பெண் கடவுளை நூற்புப் போட்டிக்கு அழைத்தாளாம். எல்லாப் புராணங்களிலும் வருவதுபோல் அம் மாது தோல்வியுற்றாள். அவளின் கர்வத்தை அடக்குவதற்கு எண்ணி, சிலந்தியாக மாறி எப்பொழுதும் நூற்றுக்கொண்டு இருக்கும் படி அத்தீன் சபித்துவிட்டாள் என்று கூறிச் செல்கிறது கிரேக்கப்புராணம். எது எப்படியிருந்தபோதிலும், சிலந்தியும் சிலந்தி இனத்தைச் சேர்ந்தவைகளும் எப்பொழுதும் நூற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அவளைச் அராக்னிடா இனத்தில் ஏறத்தாழ இருபதினாயிரம் வகைகள் இருக்கின்றன. மிகக் குளிர்ந்த துருவப்பிரதேசத் திலிருந்து, அதிக வெப்பமுடைய நிலநடுக்கோட்டுப் பிரதேசம் வரை எல்லா நாடுகளிலும் சிலந்தி இனம் பல்வேறு வகைகளில் பரவி இருக்கிறது. இருபதினாயிரம் அடி உயரத்தில் எவரெஸ்ட் சிகரத்தில்கூட இந்த இனம் இன்பமாக வாழ்கிறது. சிலந்தியின் பல்வேறு வகைகள் கடற்கரையிலும், கட்டாந்தரையிலும், நன்கு அமைக்கப்பட்ட வீடுகளிலும், அலைகளுக்கிடையில்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/78
Appearance