உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசையாது 77 நிற்கும் மலைப்பாறைகளிலும் வாழ்கின்றன. சிலந்தியில் ஒருவகை, தண்ணீருக்கடியிலும் உயிர்வாழுகிறது. அடிக்கடி நீர்க்குமிழிகள் மூலம் காற்றை உள்ளே இழுத்துக் கொள்கிறது. 5. சிலந்தி வகைகள் ஒவ்வொன்றும் அதனதன் துறையில் சிறப்பாக நூற்பதற்குத் தேர்ச்சி பெற்றிருக்கின்றன. ஒரு வகை, திறந்த வானவெளியில் பறந்து தனது ஆகாரத்தைத் தேடிக் கொண்டு நூற்கின்றன. மற்றொருவகை தரையில் பின்னுகின்றன. இலைகளின்மீது நூற்பதில் சிறந்தவைகளாக ஒருவகைச் சிலந்தி விளங்குகிறது.வீட்டின் மூலைகளில் பின்னப்பட்டிருக்கும் சிலந்திவலையைப் பற்றித் தெரியாதவர் கிடையாது. மனிதர்களைப் போலவே இந்தச் சிலந்திகளும் தங்கள் உணவிற்காக இந்த நூற்பு வேலையில் ஈடுபடுகின்றன. இந்த வலைகளில் அவ்வப்பொழுது சிக்கும் சிறு பூச்சிகளை உணவாகக்கொண்டு சிலந்திகள் உயிர்வாழுகின்றன. . பட்டினைப்போல் வழவழப்பான பின்னலுக்குள் இருக்கும் டாரண்டுலா என்னும் பெரிய சிலந்தியும், கருப்புச் சிலந்தியும் விஷமுடையவை. மற்றச் சிலந்திகள் விஷப்பூச்சிகள் அல்ல. மனிதர்களைப்போலவே இந்தச் சிலந்திகளுக்கும் அதிகத் தொல்லையை தரும் சிறுசிறு பூச்சிகள்தாம் விரோதிகள். மற்ற பூச்சிகளினின்றும் சிலந்தி மாறுபட்ட தனி இனத்தைச் சேர்ந்தது. பூச்சிக்கு ஆறு கால்களும், இறக்கைகளும், சக்தி வாய்ந்த கண்களும் உண்டு. ஆனால் சிலந்திப் பூச்சிகளுக்கு எட்டுக்கால்களும், எட்டுக்கண்கள், இருந்தும் ஆழ்ந்துபார்க்கும் திறன் மிகக்குறைவு. இவைகளுக்கு இறக்கைகள் கிடையாது. சிலந்திகளுக்கு கேட்கும் திறனும் வாசனை அறியும் திறனும் இருக்கின்றனவா என்பது சந்தேகத்திற்குரிய ஒன்று. ஆனால் இக்குறைப்பாட்டைத் தவிர்க்கவே தோன்றியதுபோல் இவை களின் மேல் மூடியிருக்கும் தோலின் ரோமம் மிக மென்மையாகவும் உணர்வு நிரம்பியதாகவும் இருக்கிறது. ரோமத்தின் உதவியால் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று சிலந்தி தெரிந்துகொள்கிறது.