உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வேண்டியிருக்கிறது. இரண்டுக்கும் மனவலிவு தேவைப்படு கின்றது. மனிதனின் செயல்களுக்கெல்லாம் காரணமாக விளங்குகின்ற மனம் மாறுபடாமல், குற்றங்குறையில்லாமல், நேர்மையாக, நாணயமாக, உண்மையாக, நிலையாக, செம்மையாக இருந்தால்தான், வாழ்க்கையானது நெறி வழிப்பட்டு நிற்கும். மனமானது தன் வலிவின் துணைகொண்டு ஆழமாகச் சிந்திக்கும் தொழிலில் ஈடுபடும்போதுதான், சிந்தை உருப் பெறுகிறது. சிந்தித்தல் என்ற சொல்லின் அடியாகப் பிறந்ததுதான் சிந்தனை என்பதாகும். மனிதனின் சொல்லுக்கும், செயலுக்கும் அடிப்படை சிந்தனை யாகும். சிந்தனையிலிருந்து ஊற்றெடுக்கும் கருத்துக்கள் சொல்வடிவிலும், செயல்வடிவிலும் வெளிப்படு கின்றன. என் சிந்தையைத் துணையாகக் கொண்டு அவ்வப்போது நான் வெளிப்படுத்திய கட்டுரைகளை ஒன்றுதிரட்டித் தொகுத்து நூலாகக் கொண்டுவந்துள்ளார் நண்பர் கே.ஜி.இராதாமணாளன் அவர்கள். கட்டுரைகளைக் கருத்து மணங்கமழும் மலர்கள் என்று கொண்டு, இந்த நூலுக்குச் 'சிந்தனைமலர்கள்' என்று பெயரிட்டுள்ளார்கள். நண்பர் கே.ஜி. இராதாமணாளன் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி பெரிதும் போற்றுவதற்குரியதாகும். இந்த நூலை நல்ல முறையில் அச்சியற்றி, அழகான வெளியீடாகக் கொண்டுவந்துள்ள பாரி நிலையத்தாரை நான் மிகவும் பாராட்டுகிறேன். சென்னை 12-8-82. } இரா. நெடுஞ்செழியன்