உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. ஆணும் பெண்ணும் ஆண்தன்மை வீரத்திற் சிறந்தது; பெண்தன்மை அன்பிற் சிறந்தது. ஆடவர் உடம்பு போருக்கும், வாழ்க்சைக்கு வேண்டும் பொருள் தேடுவதற்கும் பொருத்தமாக ஊக்கமும் உறுதியும் அமையப் பெற்றுள்ளது. பெண்டிருடம்பு தன்னைப் பாதுகாக்கும் ஆடவருளங் கவரும் அன்பும் அழகும் அமையப் பெற்றது. பொதுவாக, 'ஆண்மை' எதிர்க்கும் இயல்பிற்று; 'பெண்மை' பணியும் இயல்பிற்று. ஆண்மை வலியச் சண்டைக்குப் போவது; பெண்மை வந்த சண்டையைப் போக்குவது. ஆடவர் உள்ளம் வன்மையாயிருக்கும்: பெண்டிர் உள்ளம் மென்மை பொருந்தியிருக்கும். ஆண்பிள்ளைக்குத் துணிவு உண்டு; பெண்பிள்ளைக்கு உறுதியுண்டு. ஆண் பிள்ளைக்கு எடுப்பு உண்டு; பெண்பிள்ளைக்கு அமைதியுண்டு. ஆண்பிள்ளை ஆள்கின்றான்; அவனை அன்பால் வயப்படுத்துகின்றாள். பெண்பிள்ளை ஆண்மகன் சொற்களால் நயப்படுத்துகின்றான்; பெண் மகள் பார்வையாலும் இணக்கத்தாலும் நயப்படுத்துகிறாள். ஆண்பிள்ளையின் சட்டங்களைப் பார்க்கிலும் பெண்பிள்ளை யின் பார்வை வலிமையுடையதாகும். ஆண்பிள்ளையின் வாதத்தைப் பார்க்கிலும் பெண்பிள்ளையின் கண்ணீர் மிக்க வலிவுடையதாகும். (வழக்கு மன்றங்களிற் சான்று செல்லும் பெண்கள் குறுக்குக் கேள்விகளால் வதில்லை.) பகரச் மயங்கு