உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ம முற்காலத்திற் பிள்ளைப்பேறு மிகுதியாக இருந்தமை யாற் பெரும்பாலும் வீடு அடங்கி இருக்கவேண்டிய பெண்மை ஏற்பட்டது. பெண்பாலுக்குள்ள தாய்மையின் இயற்கைத் தன்மையானது முற்றிலும் அடங்கியிருத்தலையும், தன்னயம் மறுக்கும் ஊழியத்தையும் வேண்டற்பாலதாயிருக்கின்றன. ஆண்பிள்ளை பிறர் காப்பின்றி இருத்தல் கூடும். ஆனால் பெண்பிள்ளை அப்படியிருக்க வொண்ணது. அவள் தன் விருப்பத்தாலும் முயற்சியாலும் தன் சாயலில் மற்றோர் உயிரை உண்டாக்கிப் பாதுகாக்க வேண்டியவளாயிருக் கிறாள். பெண்கள் பிறர் உணர்ச்சியை உடனே அறிந்து கொள் வார்கள். ஈகையியல்பு பெண் மக்களுக்கே சிறந்தது. இவர்கள் இன்பத்தையும் மிகுதியாய் நுகர்வார்கள். அப்படியே துன்பத்தையும் மிகுதியாய் ஏற்பார்கள். பெண்கள் பிறர் வருத்தத்தை விரைவில் அறிந்துகொள்வார்கள். அவர்கள் சிறிய குறிகளாற் பிறர் உள்ளத்திலிருப்பதைக் கண்டு கொள் வார்கள். ஒருவன் நலமாயிருக்கின்றானா நலமின்மையா யிருக்கின்றானா, மகிழ்ச்சியுடனிருக்கின்றானா கவலை யுடனிருக்கின்றானா, தோல்வியுற்றிருக்கின்றானா வெற்றி யுற்றிருக்கின்றானா, இன்னுந் தன்னை விரும்புகின்றானா ா முதலியவற்றை யெல்லாம் முகப்பார்வையிலேயே தெரிந்து கொள்வார்கள். இப்படி உய்த்துணர்தலாகிய சிறந்த காட்சி யும் மிகுந்த இரக்கமும் சேர்ந்துதான் பெண்களை வாடி வதங்கிய நோயாளிகளுக்குச் செவிலித்தாயாகும் நிலைக்கு ஆளாக்குகின்றது. மிகுந்த ஆழ்ந்த உணர்ச்சியுடையவர் ஆண்பிள்ளைகளைப் பார்க்கிலும் பெண்கள் ஆர்வமுடையவர்களாகவும், களாகவும் இருப்பதால், ஏற்பட்ட பழைய வழக்கங்களிற் பற்று விடாதவர்களாகவும், எதிலும் மாறுதலை விரும்பாதவர்களாக வும் இருக்கின்றார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தோடு வளர்ந்த எவரேனும் எதுவேனும் பிரிந்திருக்கப் பொறார்.