82 கொள்கை. அவர்கள் உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்வார்கள். புற அழகிற் பற்றுடையவர்கள். பெண்கள் பொதுவாக இரக்கத்தோடு செயல் புரிவார்கள். ஆனால் எண்ணத்தில் எப்பொழுதும் அப்படி இல்லை. ஆண் பிள்ளை ஒன்றில் விருப்பமாயிருப்பான், அல்லது விருப்ப மில்லாதவனாயிருப்பான். பெண்பிள்ளை விரும்புவாள் அல்லது வெறுப்பாள். ஒன்றை ஆண்பிள்ளை விரைந்த போக்கிலே அவாக்கொள்வான்; பெண்பிள்ளையின் அவா அழுத்தமானதாயிருக்கும். தன்னால் விரும்பப்பெற்ற ஆடவர்களிடம் எவ்விதக் குற்றமுங்காணப் பொறாள். வேண்டாதாரிடத்தில் நன்மையுள்ள தெனினும் மதியாள். தன்னால் விரும்பப் பெற்றவர்களிடத்திற் காணுங் குற்றங்கட்குத் தக்கவாறு அமைதி செய்து கொள்வாள். அதன் பொருட்டாகவே நெஞ்சறிந்த பொய்யை அவள் சொல் வதாகக் கருதுவதில்லை. ஏனெனில், தான் சொல்வதற்கு முன்னமே தான் சொல்வது மெய்யென உறுதி செய்துகொள் கின்றாள். ஒருத்தி தன் தீவினைகளை ஒப்புக் கொள்வாள்; குற்றங்களை ஒப்புக்கொள்வது அரிது. ஒருவன் தன் பிழையை ஒத்துக் கொள்வான்; ஒருத்தி தன் பிழையைத் தவறுத் லென்பாள் - நாம் மன்னிப்போம். பெண்கள் தங்கள் மறைபொருள்களில் அடக்கமுடையவர் களாயிருப்பார்கள்; ஆனால் பிறர் மறைபொருள்களில் அப்படி இருப்பதரிது. ஆண்பிள்ளை விதி ஏற்படுத்துகின்றான்; பெண்பிள்ளை ஆள்கின்றாள். அவன் தலைமை பூணலாம்; அவள் நடத்துவாள்; அவன் ஆய்ந்தறிந்து உத்தி சொல்வான்; ஆனால் அதனை உறுதிப்படுத்துபவள் அவளே. அவன் அவளை அடக்க முயல்வான்; ஆனால் அவள் அவனை வயப்படுத்திக் கொள்வாள்.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/84
தோற்றம்