83 ஆடவன் குடும்பத்துக்குத் தலையாயிருக்கலாம்; அவள் இதயமா இருக்கின்றாள். அவன் அறிவு உணர்ச்சியில் வயப்படும்; அவள் உணர்ச்சி அறிவில் வயப்படும். அவன் இயற்கை அன்பின் வழியது; அவளது இயற்கை அத்தகைய தன்று. அவள் அவனிடத்தில் அன்பாயிருக்கின்றாளென்பதற்கு அவனுக்கு வேறு சான்று வேண்டுவதில்லை; அவள் அடங்கி நடத்தலே போதுமானதெனக் கொள்வான்; ஆனால், அவன் அவளிடத்தில் அன்புடையனாயிருப்பதற்கு நாள்தோறும் வெளிப்படையான சான்றுகள் சொல்லிலிஞ் செயலிலும் காட்டப்படல் வேண்டும். ஆர்வமுள்ள ஆடவன் விரைவுடையனாயிருப்பான். அவன் தனது நெஞ்சம் திரிந்துபோன போக்கின்படியெல்லாம், உடனே சீர்திருத்தத் துணிவான். அவள் ஒவ்வொரு நிலைமையிலும் நேரத்தைக் கடத்துவாள். அவன் விரும்புவது சிறிது; அவள் விருப்பம் மிகுந்ததாயினும் அவள் இணங்குவது அரிது. ஆண் பிள்ளை தன் ஆவலை நிறைவேற்றும் பொருட்டுத் தன் இன்னுயிர்க் காதலியையும் இழக்கத் துணிவான்; அவள் காதலுள்ள வரையிலுந் தன் வரையிலுந் தன் கணவனை இடைவிடாது காதலிப்பாள். அவனோ அவ்வாறு செய்வதில்லை. இதற்கு ஏது என்னவென்றால் அவளைப் பார்க்கிலும் அவனுக்கு ஏற்பட்டிருக்கின்ற வேலைகள் மிகுதி; வாழ்நாட்போக்கில் அவன் ஈடுபட்டிருக்கின்ற வேலைகள் பல ஆகையால் இல்வாழ்க்கையில் அவன் விருப்பத்தின்படி நினைவைச் செலுத்துதல் இயலாது. கொடுத்தலும் எடுத்தலும் ஆண்பால் பெண்பால்களுக்குப் பிறப்பியல்பாயமைந் துள்ள ஒற்றுமை வேற்றுமை நயங்களை இருபாலாரும் நன்கறிந்து கொள்வரேல், இருவரும் மெய்யன்புடையவர் களாயும், உண்மைக் காதலர்களாயும் வாழ்வார்களென்பதில் ஐயமில்லை. இல்லறத்திற்குரிய பெரும்பயன் ஆணும்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/85
Appearance