உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. பெரு வாழ்வு முயற்சியுள்ள வினையாளன் தடைகளால் தளர்வா னல்லன். ஆனால் அவற்றை மேற்கொள்ளும் வழி எதுவென்பதையே நாட முனைகிறான். அஃதேபோல் உயர் நிலையடைய இடைவிடாது முயற்சி செய்வோனை, அவா அடக்கிவிடமுடியாது. ஆனால், அவன் தன் உள்ளத்தினை எவ்வாறு காத்துக் கொள்வதென்றே ஆழ்ந்த நினைவிலிருக் கிறான். ஏனெனில் அவாவை மூட்டுவோன் ஓர் கோழையை யொப்பவனாவான். தளர்வும் நலிவும் ஏற்பட்டபோதுதான் அவன் முந்துகிறான். அவா மூட்டப்படுபவன் அவாவின் தன்மையையும் பொருளையும் கூர்ந்து ஆராயவேண்டும். ஏனெனில் அதனை அறியும்வரை, அதனை மேற்கொள்ள முடியாது. அவாவினை மேற்கொள்ளவிருப்பவன் அஃது எவ் வாறு இவன் அறிவீனத்திலும் தவறிலுமே வெளிப்படுகிற தென்பதை அறியவேண்டும். தன்னையே ஆராய்ந்தும் ஆழ நினைந்தும் எவ்வாறு மடமையகற்றித் தவற்றைப் போக்குவ தென்பதை உணர்ந்து கொள்ளல் வேண்டும். உண்மையை அறிந்துகொள்ளவேண்டுமாயின், ஒருவன் தன்னையே அறிந்து கொள்ளல்வேண்டும். தன்னையறிந்து கொள்ளல் தன்னை வெற்றிகொள்ளுவதற்கு வழி. உயர்நிலையடையப் படிப்படியாய் மேலேறுவது, சில வற்றைப் பின்னாகவும் கீழேயும் விட்டுப் போவதாம். தாழ்ந் ததை யொழித்தாற்றான் உயரியதை யடையமுடியும். தீமையை யகற்றி விட்டாற்றான் நலத்தையடைதல் முடியும்; அறிவை யடையப் பெறலாம். நாம் பெறும் ஒவ்வொன்றுக்கும் விலை யுண்டு. விலையனைத்தையுங் கொடுத்தே யாகவேண்டும்.