உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ஒவ்வொரு விலங்கினமும், ஒவ்வொரு ஊர்ந்து செல்லும் சிற்றுயிரும் ஏதாவதோர் சிறந்த குணத்தைப் பெற்றேயிருக் கின்றன. உயர்நிலை நாடிச்செல்லும் மகனோ அதை விடச் சிறந்த குணத்தையோ, அன்றி வலிமையையோ பெறுமாறு அதனை அவற்றிற்கு விட்டுவிடுகின்றனன். தன்னலப் பற்றுக் கொண்ட வழக்கங்களைப் பற்றி நிற்ப தால் மக்கள் பெரும் நலன்களை யெல்லாம் இழந்துவிடுகிறார் கள். நாம் தாழ்ந்தவற்றை எத்துணையகற்றி விடுகிறோமோ அத்துணை அறிவும் ஒளியும் பெறுகிறோம். அறிவும் ஒளியும் பெற்றவன் தவறி வீழ்ந்துவிடாமல் தன்னைக் காத்துக் கொள்க. அற்பக் கருமங்களிலும் அவன் கருத்துடனும், தீவினை யவனைபற்றிக் கொள்ளாதவாறு தனக்கு அரண் செய்து கொண்டு மிருக்கட்டும். மக்கள் வாழ்வில் பலதிறப்பட்ட செயல்களெல்லாம். மக்களின் நெஞ்சத்திலேயே வேரூன்றிக் கிடக்கின்றன. அவை தமக்கு வலிமை பெறுவதும் ஆண்டிருந்தே. துன்பத்துக்கும் இன்பத்துக்கும் ஏது மக்கள் வாழ்க்கையின் புறச்செயல்களி லில்லை. ஆனால் நெஞ்சத்தினுடையவும், உள்ளத்தினுடைய வும் அகச் செயல்களிலேயே பதிந்து கிடக்கிறது. புறச் செயல் ஒவ்வொன்றும் மக்களின் நடையினின்றுந்தான் உயிர் பெற்று வாழ்கின்றது. தன் தவறுகளையும் குறைகளையும் வெளிப்படுத்தப் பொறாதவன், ஆனால் அவற்றை மறைக்க முயலுபவன், உண்மைநிலையை யடைய அருகனல்லன். அவாவுடன் போர் செய்து அஃதினை மேற்கொண்டுவிட அவன் இன்னும் தயாராகவில்லை. தன் தாழ்ந்த நிலையைப் பயமின்றி எதிர்த்துப் போராட முடியாத ஒருவன் நீத்தார் நிலையை யடைவது முடியாது. எடுத்த கருமங் கைகூடப் பெறாமையினால் சோர்வடைந்து விடல் வேண்டா. அத்தவறுதலினின்றும் நீ அடையப் பெறும் ஓர்விதப் பெருமையும், அறிவும் உள. தவறினால் நீபெறும் அனு பவத்தைவிடப் பிறிதொரு ஆசான் அத்துணை உறுதியாய்த்