உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 துரிதமாய் உனக்கு அப்பெருமையையும் அறிவையும் அளித்து விடமுடியாது. நீ தவறிழைக்கும் போதெல்லாம், தீவினையில் விழும்போதெல்லாம் நீ அறிந்துகொள்ள முயற்சித்தால் சால வும் முதன்மையான பாடம் மிளிர்ந்துகொண்டிருக்கிறது. அரித்துவிடத் தகையதான கேடுகளிலும், நலத்தைக் கண்டு கொள்வோன் அமிழ்ந்துவிடான்; மேலேறிவிடுவான். தன் தவறுகளையெல்லாம் இறுதியான சீரிய வெற்றிக்குக் கருவி களாய்க் கொள்வான். மூடர்களே தங்குற்றங்களுக்கும் தீவினைகளுக்கும் பிறரைப் பழிக்கிறார்கள். ஆனால் உண்மையை நாடுவோன் தன்னையே பழிக்கட்டும்; தன் நடைக்குத் தானே பொறுப்பாளியென்பதை ஒப்புக் கொள்ளட்டும். புதியன தோன்றுமுன், பழையன கழிதல் வேண்டும். புதிய மாளிகை நிறுவப்படுமுன் அவனிருந்த பழைய குடிசை அழிக்கப்படல் வேண்டும். புதிய உண்மை துலங்குமுன் பழைய பிழை நீக்கப்படல் வேண்டும். புதிய மகனாய் நிலவுமுன் ஏற்கனவே பீடித்திருந்த 'நான்' என்பதை நீத்தல்வேண்டும். கோபம், பொறுமையின்மை, பொறாமை, அகந்தை, தூய்மை யின்மை யாகியவைகளா லாக்கப்பட்ட 'நான்' என்பது நசித்த பின்னர், அஃதிருந்த இடத்தே அன்பு, பொறுமை, நல்லெண்ணம், அடக்கம், தூய்மையாகிய புதிய மகன் தோன்று கிறான். தீவினையும், துன்பமுமாகிய பழைய வாழ்க்கை ஒழிக; நேர்மையும் மகிழ்ச்சியும் கூடிய புதிய வாழ்க்கை தோன்றுக. பழைய அழுக்கடைந்தனவெல்லாம் அப்பொழுது புதியதாய் அழகுபெற்று விளங்கும். இக்கொள்கையை உணர்ந்து, அடையப் பெறுவதுதான் மேலுலகத்தை யடைவதாகும். நிலையான பெருவாழ்வுக்கு அதுவே வழி விடுவதுமாம்.*

  • ஜேம்ஸ் ஆலன் என்ற ஆங்கில நாட்டுப் பெரியார்

இயற்றிய அறிவுரைகளினின்றும் மொழி பெயர்க்கப்பட்டது.