11. அணுசக்தியும் உடல்நலமும் கடந்த பத்தாண்டுகளில், அணுக்கதிரியக்கமுள்ள பொருள்களை நோயறிவதற்கும் நோய் தீர்ப்பதற்கும் பயன் படுத்தி, நல்ல பயன் கண்டிருக்கிறார்கள். இதனால், ஒரு புதிய வைத்தியமே தோன்றியுள்ளது. ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் அயராது வருந்தி உழைத்ததனால்தான் இந்த அரிய காரியங்கள் நடந்துள்ளன. வருங்காலத்தில் அணுசக்தி மக்கள் உடல் நலத்துக்கு மாபெரும் துணையாய் விளங்கும் என்னும் நம்பிக்கை, அவர்களுடைய அயராத உழைப்பினால் ஏற்பட்டுள்ளது. . ஏ அணுசக்தி வைத்தியத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமெல்லாம் கிட்டத்தட்ட 1947க்குப் பிறகு ஏற்பட்டதே யாகும். அந்த வருஷந்தான் அமெரிக்கா அணுக் கதிரியக்கமுள்ள ஐஸடோப்புகளைப் பெருவாரியாகச் செய்து உலகமெல்லாம் விநியோகிக்கத் தொடங்கியது. அப்பொழுது தான் விஞ்ஞானிகளுக்கு அந்த அரும்பொருள் முதன் முதலாகப் போதிய அளவில் கிடைத்தது. அவர்களும் உடற் கூற்றின் இயல்களை மிகமிக நுணுக்கமாக ஆராயவும், பிணி களைத் தீர்க்கவோ தணிக்கவோ புதுப்புது வழிகளைக் காண வும் முடிந்தது. அணுசக்தியை அடக்கியாண்டு மனிதனுடைய நன்மையை எவ்வாறு பெருக்கலாம் என்று அறிவதற்குக் கடந்த எட்டு ஆண்டுகளாகப் புதிய வழிதுறைகளும் நுண்ணிய கருவிகளும் கண்டு பிடித்திருக்கிறார்கள். அணுக்கதிரியக்கமுள்ள
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/90
Appearance