89 ஐஸடோப் எதனையும் மருந்தாகக் கொள்ளுமுன், அதன் அணுக்கதிர் எவ்வளவுக்கு மேற்போகாமல் இருந்தால் உடம்புக்குக் கேடு விளையாது என்றும், அணுசக்தி வைத்தியத் தால் இரத்தமும் எலும்பும் உடம்பின் உறுப்புகளும் என்னவா கின்றன என்றும், அவை கடைசியில் அணுக்கதிரியக்கத்தை எப்படிக் கழித்து விடுகின்றன என்றும், நுணுக்கமாக ஆராய்ந்து தெரிந்தாக வேண்டும். இவையும் இன்னும் பல சிக்கலான விஷயங்களும் தெரிந்தால்தான், ஒவ்வொரு ஐஸடோப்பும் மருந்துக்கு உதவுமா என்பதும், அதை எப்படி உட்கொள்ளவேண்டும் என்பதும் தெரியும். . அணுசக்தி வைத்தியம் இன்று ஆரம்பதிசையில்தான் இருக் கிறது என்றாலும், இன்று கைவரப்பெற்றது சில ஆண்டு களுக்குமுன் கூடக் கனவாகவே இருந்தது. ஏற்கனவே நனவாகி யிருக்கும் அருஞ்செயல்களால் இப்புதிய விஞ்ஞானம் உலகுக் கெல்லாம் மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. இன்ன கோளாறுதான் என்று கண்டுபிடிக்க முடியாத படி இருந்த பல நோய்களின் தன்மையை, இன்று அணுக் கதிரியக்கமுள்ள ஐஸடோப்புகளை உடம்பில் செலுத்தி அவற்றின் போக்கைக் கருவிகளால் காண்பதால் உடனே அறிகிறார்கள். பின்னர் அதே ஐஸ்டோப்புகளை மேலும் ஊட்டினால் அந்நோய்கள் தீர்ந்து விடுகின்றன. தீராத நோய்கள் என்று நினைத்தவை பல, இப்புதிய முறைகளால் ஒன்று தீர்க்க அல்லது தணிக்கப் படுகின்றன. ய அமெரிக்கா அணுசக்திக் கமிஷனின் உயிர் நூலும் உயிர்நூலும் வைத்தியமும் ஆகிய பகுதிக்குத் தலைவராக இருக்கும் விஞ்ஞானி டாக்டர் ஜான் பியூகெர் 'வைத்தியத்துறையில் அணுசக்தியால் ஏற்பட்டிருக்கும் சாதனைகள் புரட்சிகர மானவை' என்கிறார். இன்னும் தொடர்ந்து நடக்கும் ஆராய்ச்சியில் நமது வாழ்நாளிலேயே அணுசக்தி வைத்தியம் உலகிலிருந்து பல நோய்களை ஓட்டிவிடும்' என்கிறார் அவர். 21.16
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/91
Appearance