உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தொற்று நோய் உடல் நலத்துக்கு ஒரு பெருங்கேடாக இராது; புற்றுநோய் தீர்ந்துபோகும் அல்லது திருப்தி யாய்த் தணியும்; வெப்பநாடுகளில் நோய்களை விளைவிக்கும் ஒட்டுண்ணிகள் ஒழியும் என்று அவர் சொல்கிறார். உலக மெங்கும் எல்லா இடங்களிலும் கோடிக்கணக்கான மக்களுக்குக் கனவிலுங் கருதாத சுகாதார நன்மைகள் வருங் காலத்தில் பூட்டிவைத்திருக்கின்றன என்றும், அவற்றைத் திறந்து தருவது இன்றைய அணுசக்தி ஆராய்ச்சி என்றும் அவர் கூறுகிறார்.