உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 சிவந்துவிட்டது. அன்ன நடை மாறி, தடுமாறும் கால்களுடன் சோர்ந்து காணப்படுகின்றனர். பக்கத்திலுள்ள காதலர் காதலை வேண்டியல்ல; குளிர்ந்த காற்றை வேண்டித் தவிக் கின்றனர். நரம்புகள் இசையை உண்டாக்கவில்லை; பாடு வோரின் குரல் மட்டுமல்ல, வெளிப்படும் பாட்டும் வறண்டதா யிருக்கிறது. கத்துகின்றனர்; எந்த ரோமனும் அதைக் கீத மென்று சொல்லமாட்டான். மணமிக்க பொடிகள் எங்கும் தூவப்படுகின்றன. அவை காற்றிலே பரவவில்லை; மண்ணிலே கலந்துவிடுகின்றன. ரோம் நகர முதல்வனே! விழாவின் பெயரைக் கேட்டால் தங்களுக்குச் சிரிப்பு வரும். விழாவின் பெயர் வசந்த விழா!" " "வசந்த விழா! அந்த மெல்லிய பெயரைக் கூறக்கூட இந்த வறண்ட கோடையில் நாக்குக் கூசுகிறது. பசும் புற்றரை; பசிய பூங்கா ; ஆரவாரத்துடன் ஓடிவரும் டைபர் ஆறு ; இவை களின் மீது படிந்து வரும் இளங்காற்று. அதற்குப் பெயர் வசந்தம்! தளிரசைத்து, மலர் காட்டி, மணம் விசி நம்மை அழைக்கும் பூங்காவனங்கள்; கள்ளுண்டு மயங்கித் திரியும் வண்டுகள்போல் இனிய கானத்தைப் பிதற்றியவண்ணம் காவிடை சுழன்று வரும் காதலர்கள்! இள மரங்களைத் தழுவி நிற்கும் மலர்க்கொடி! கள் மலர்களிலிருந்து மகரத்தை பறித்துச் செல்லும் மாருதம்! ஓடுகின்ற மகரந்தத்தின் பின் பாடிச் செல்லும் வண்டினம்! அது வசந்தகாலத்தில் வருகிற வசந்த விழா ! நீ குறிப்பிடுவது வறண்ட கோடையில் வரும் வசந்த விழா! வீணரின் விழா! நீங்கள் எவ்வளவுதான் கூப்பாடு போட்டாலும் காதல் தெய்வமான வீனஸ் அங்கு வரமாட்டளே! 'சீசரே! விழாவின் பெயரைக் சொன்ன என்னை கோபிக்காதீர். விழாக் கொண்டாடுகிற மக்கள் மீதும் குற்ற மில்லை. வசந்த விழா ஆரம்பமாகி விட்டதென்று குருமார் அறிவித்தார். மக்கள் குழுமியுள்ளனர்.' "குருமார் குருடாகி விட்டாரா, வானத்தைப் பார்த்து மண்ணின் நிலையை அறியமுடியாதபடி? நன்றாகப் பார்!