உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 வறண்டகோடைக்கும் குளிர்ந்த வசந்தத்திற்குமுள்ள வித்தி யாசம். பருவம் கோடையென்று, கோல் பிடித்துத் துழவும் குருடன் கூறிவிடுவான் சுலபமாக. ஏன் இவ்வளவு பிழை?' "ஒருவர் மட்டுமல்ல, இவரும், இவருக்கு முன்பிருந்த குருமார்களும், செய்த சதி அது. அவர்கள் நினைத்தபடி யெல்லாம் காலண்டரை அமைத்தனர். அதன் விளைவாகப் பருவங்களை சரியானபடி அறிய முடியாமல் மக்கள் மயங்கு கின்றனர். அதற்கு உதாரணம் குருமார் காலண்டர்படி வசந்த விழா நல்ல கோடையில் வந்துள்ளது. 1-1-48 - 1948ம் ஆண்டின் முதல் நாள்! 1947 ஆம் ஆண்டு தன் ஆதிக்கத்தை முற்றிலும் செலுத்திவிட்டது. புது ஆண்டு தொடங்குகிறது. "பூமியில் மானிடராய் ஏன் பிறந்தோம்" என்று பழி தூற்றுபவர்களையும்,"மண்ணகம் முழுவதும் ஆளவே நாம் பிறந்தோம்" என்று நிலத்தை அழுத்திடும் மமதையாளரையும் ஒருங்கே சுமந்து, வெப்பமும் குளிரும் மாறிமாறித் தாக்க, முழுமதி மறைந்தும் வெளிப்பட்டும் விளையாடி வர, சூரியனைச் சுற்றி, ஒரு வட்டம் சுழன்றுவிட்டது பூமி. கதிர வனை ஒருமுறை சுற்றிவர பூமி எடுத்துக்கொள்ளும் கால அளவிற்கே ஆண்டு என்று பெயர்.வான நூல் ஆராய்ச்சிகளின் படி ஆண்டின் சரியான அளவு 365 நாட்கள் 5மணி 48 நிமிடம் 49. 7 வினாடிகளாகும். ஆண்டுதோறும் 365 நாட்க ளென்றும், நான்கு ஆண்டுகளுக்கொருமுறை ஒருநாள் கூட்டு வதன் மூலமும் இந்த அளவு ஒருவாறு பாதுகாக்கப்படுகிறது. புத்தாண்டு பிறந்ததும் வாழ்த்துகளும், நன்றியுரைகளும் பறிமாறப்படும். அரசியல் ஆருடக்காரர்கள் புத்தாண்டின் ஜாதகத்தைக் கணிப்பார்கள். சென்ற ஆண்டில் அவர்கள் கொடுத்த கணக்குச் சரியானபடி நடந்ததா என்று எவரும் கவனிப்பதில்லை. கவனித்தவர்களுக்கே கவனம் வராது. 1947ஆம் ஆண்டில் நாம் பட்ட அவதிகளும் துன்பங்களும் தீர்ந்தன; இனி 1948ஆம் ஆண்டு நல்வாழ்வை நல்கும் என்று