95 வளர்ந்துவிட்டது. வருஷப்பிறப்பு-இப்பொழுது வழக்கத்தி லுள்ள வருஷம் எவ்வாறு பிறந்தது? அந்த வரலாறு பல வேடிக்கையான சம்பவங்களையுடையது. ஏ சரித்திர காலத்துக்கு அப்பாற்பட்ட மனிதனுக்குக் காலத்தைக் கணக்கிடுவதற்கான வசதிகள் மிகக் குறைவே. கதிரவனின் போக்கு ஒன்றுதான் காலவரையறையின் முதற் பாடம். கதிரவன் உதயமானதும் வெளிச்சம் வருவதும், அது மறைந்ததும் இருட்டு ஏற்படுவதும், இவ்வாறாக உதயமும் மறைவதும் மாறிமாறிப் பொழுது போவதைக் காட்டின. ஒரு உதயத்திலிருந்து மறு உதயம் வரை உள்ள கால அளவுக்கு 'நாள்' என்று பெயர் ஏற்பட்டது. முதன் முதலில் நேற்று இன்று நாளை என்ற காலப்பெயர்கள்தான் ஏற்பட்டிருக்க முடியும். மொழி வளர்ச்சியில் இம்மூன்று சொற்களைத் தவிர நாளை அடிப்படையாகக் கொண்ட வேறு தனிச் சொற்கள் உண்டாகாதது கவனிக்கத்தக்கது. ஒரு பகற்பொழுதிற்கும் மற்றொரு பகற்பொழுதிற்கும் எத்தகைய வித்தியாசமும் ஆதிகாலத்தில் புலப்பட்டிருக்காது. ஆனால் இராக்காலங்கள் குறுகியகால அளவிற்குள் பல மாறுதல்களைக் காண்பித்தன. பகலில் எவ்வாறு ஞாயிறு வழிகாட்டியதோ, அவ்வாறே இரவு நேரத்தில் நேரத்தில் திங்கள் உதவியது. முழு வட்டமாக ஒளிவிட்ட திங்கள் நாள்தோறும் தேய்ந்து கடைசியில் முழுவதும் மறைந்துவிடுவதும், பின் சிறுகச்சிறுக வளர்ந்து முழுஉருவத்தை அடைவதும் அவர்களின் கவனத்தை ஈர்த்தது. கதிரவன் உதயமாகி, மறைந்து, மறுபடி யும் உதயமாகும்வரை ஏற்பட்ட காலஅளவுக்கு நாள் என்று பெயர். அதைப்போல திங்கள் முழு உருவத்திலிருந்து தேய்ந்து முற்றிலும் மறைந்து மறுபடியும் முழு உருவத்தை அடையும் வரையுள்ள காலஅளவிற்கு மாதம் என்ற பெயர் ஏற்பட்டது. காலத்தை மதிப்பிடுவதற்கு உதவியாக இருந்த காரணத்தால் திங்களுக்கு மதி என்ற பெயரும், அதன்மேல் எழுந்த கால
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/97
Appearance