உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 அளவுக்கு திங்கள் என்ற பெயரும் ஏற்பட்டன. கணக்கின்படி ஒரு மாதம் 29 நாள் கூடியது. இந்தக் மற்றொரு வகையில் காலத்தைக் கணக்கிடுவதற்கு, கோடைக்காலம், இயற்கை வேறுபாடுகள் மழைக்காலம், இலையுதிர்காலம், செடி கொடிகளில் தளிர்கள் உண்டாவது. சமவெளிகளில் புல் செழிப்பாக வளர்தல், ஆறுகளில் நீர் பெருகி மறுபடியும் வடிதல் இவைபோன்ற பருவ வேறுபாடுகள் குறிப்பிட்ட காலத்திற்குப்பின் தவறாது வருவது அவர்களின் கவனத்திற்கு வந்தது. இந்தக் காலஅளவைக் கணக்கிடுவது தான் ஆண்டு. ஆங்கில மொழியில் "நான் இருபது கோடை காலங் களுக்கு முன் பிறந்தவன்"; “நான்கு மாரிகாலங்களுக்கு முள் அது நிகழ்ந்தது' போன்ற வாக்கியங்கள் பருவ வேறுபாடு களைக் கொண்டு காலத்தைக் குறிப்பிடுகின்றன. "கார்காலத்தில் வருவேன்" என்று காதலன் விடை கூறிப் போவதும், "கார்காலம் நெருங்கிவிட்டது. அவர் காட்டிச் சென்றதால் முல்லை என் தனிமையைப் பார்த்து நகை செய்கிறது. வாடை தொடங்குகிறது; எனினும் அவர் வரக் காணேன்' எனத் தலைவி ஏங்குவதுமான சங்கப்பாடல் களிலும் பருவவேறுபாடுகள் காலத்தைக் குறிக்கின்றன. " பயிர்த்தொழிலில் ஈடுபட்டவர்களுக்குப் பயிர்வகைகளின் தோற்றமே காலக் கணக்கீடாக அமைந்தது. கடலுக்குப் பக்கத்திலிருப்போர் கடலலையின் ஏற்றத் தாழ்வுகளையும், காற்றின் கடுமை திக்கு இவைகளையும், வலையில் அகப்படும் மீன் இனங்களின் வேறுபாடுகளையுங் கண்டு காலத்தைக் கணக்கிட்டனர். ஒரு பருவத்திற்கும் மற்றொரு பருவத்திற்கும் இடைப் பட்ட காலத்தைச் சரியாகக் கணக்கிட முயற்சி செய்யப் பட்டது. பருவவேறுபாடுகளை முன்கூட்டியே தெரிந்து கொள் வது பயிர்த்தொழிலில் ஈடுபட்டவர்கள், ஆடு மாடு மேய்ப்பவர்