உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 கள், வெள்ளத்தால் பாதிக்கப்படும் பள்ளத்தாக்குகளில் வசிப்பவர்கள் இவர்களுக்கு அவசியமாகிவிட்டது.29]நாள் கூடிய மாதம் என்ற அளவு வழக்கில் வந்துவிட்டபடியால், அதைக் கொண்டு வருஷத்தை அளக்க முற்பட்டனர். 12 ஒரு மாதத்திற்கு 30 நாட்கள் என்று வைத்துக் கொண்டு, மாதங்கள் கொண்டது ஒரு ஆண்டு என்று ஆரம்ப காலத்தில் எகுபதியரால் கொண்டாடப்பட்டது. 360 நாட்கள் கொண்ட வருஷக்கணக்கு சுமேரியா, சைனா போன்ற நாடு களிலும் இருந்ததாகத் தெரிகிறது. பாபிலோனியர் 29,30 என்று மாறிமாறி 12 மாதங்களமைத்தனர். இதன்படி ஆண்டு ஒன்றுக்கு 354 நாட்கள் வரும். திராவிட நாகரிகங்கள் தழைத்த சிந்துநதி தீரத்தில் நட்சத்திரங்களின் அமைப்பைக் கொண்டு ஆண்டின் தொடக்க நாள் சரியாக வரையறுக்கப் பட்டிருந்ததாகத் தெரிகிறது மேற் குறிப்பிட்ட கணக்குகள் சரியானவையல்ல. நாலைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே ஒரு மாதத்திற்கு மேல் பிசகி விடும். பருவங்கள் இவர்கள் குறித்தபடி வருவதில்லை. ஒவ்வொரு ஆண்டிலும் நாட்கள் குறைந்துவிடுகிற பிழையைத் திருத்தி, யூதர்கள் 19 ஆண்டுகளில் 7 மாதங்களையும், கிரேக்கர்கள் 8 ஆண்டுகளில் 3 மாதங்களையும் சேர்த்தனர். ம் ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள் என்பது எகிப்து நாட்டில் கி.மு. 5ஆவது நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.எகிப்து நாட்டின் உயிர்நாடியாக விளங்கியது நைல் நதி. நாட்டின் பயிர்த்தொழிலுக்கு நைல் நதியின் தண்ணீர் தேவையா யிருந்தது. ஆனால் திடீரென்று நைல்நதியில் வெள்ளம் பெருக் கெடுத்தோடும் பக்கத்திலிருக்கும் வயல்களும், ஊர்ப்புறங்களும் உருத்தெரியாதபடி வெள்ளத்தால் அழிக்கப்படும். வெள்ள நீரைப் பயன்படுத்துவதற்குமுன் வெள்ளம் வடிந்துவிடும். எனவே நைல்நதியில் வெள்ளம் ஆரம்பமாவதை முன் கூட்டியே அறிய வேண்டிய அவசியம் எகிப்தியருக்கு ஏற்பட்டது. நைல் நதியில் நீர் பெருகும் சமயத்தில், சிரியஸ் என்ற ஒளிமிக்க நட்சத்திரம் கிழக்கே விடியலில் பிரகாசிப்பதைக் கண்டனர்.