பக்கம்:சிந்தனை மேடை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. வாக விதம்விதமான வளையல்களோடு வருவார்கள். வாங்கு கிறவர்களுக்கு அவர்களே வளையல்களை அணிவிப்பதுதான் பழைய காலத்து வழக்கம். வளைகளும் உடைந்து விடாமல் அணியப்படுகிற கைகளும் நொந்து விடாமல் அவர்கள் வளை அணிவிக்கும் திறமையைப் பிறருடன் பழகும் ப்க்குவமான நிலைக்கு உதாரணமாகக் கொள்ள முடியும். போலி மதிப்பு பிறர் நம்முன் நியாயமாகச் சிரிப்பதற்கும் அஞ்சுகிறபடி நாம் வளர்த்துக் கொள்ளுகிற கெளரவங்கள் என்றும் தம் மிடம் நிலைக்கும் என நம்ப முடி யாது. பிறர் வாயை வேண்டிய இடங்களில் கூடப் பே ச வி ட | ம ல் கட்டுப் படுத்தி நிறுத்தவும், சுபாவமாகப் பழக வேண்டிய இடங் களில் கூட நடுநடுங்கி நி ற் க ச் .ெ ச ய்ய வு ம் முடிகிற "கெத்து வேண்டும் என்று அதிகாரிகள் உத்தியோக லட்ச ணம்’ கூறுவார்கள். பயமுறுத்தி அடைகிற கெளரவம் என் ருவது ஒரு நாள் கரைந்து போகும். காட்சிக்கு எளிமை, பேச்சுக்கு எளிமை, பழக்கத்துக்கு எளிமை - இவற்ருல் எந் தவிதமான கெளரவத்தையும் அடைய முடியாது போலச் சராசரி மனிதனுக்குத் தோன்றிலும் பண்பில்ை மனிதர்களே அளந்து பார்க்கிறவர்கள் இவற்றைத்தான் நிலையான கெளர வங்களாக மதித்துக் கணக்கிடப் போகிருர்கள் என்று நாம் உறுதியாய் நம்புவோமாக. பூக்களைப் போல் எல்லார்க்கும் எங்கும் வேறுபாடின்றி மலர்ந்து மணக்க வேண்டும். கோடீஸ்வரராகிய பிரபு பார்க்க வருகிற போது மலர்ந்து மணந்த பூ ஒன்று குப்பை மேட்டுச் சுப்பன் பார்க்க வருகிறபோது கூம்பிக்கொண்டு விடுவதில்லை. பண்பாட்டின் நிறைந்த எல்லே இப்படி எல் லார்க்கும் மலர்ந்து நிற்பதுதான். அற நூலாசிரியர்கள் இந் தக் குணத்தை ஒப்புரவு, அருள், கருணை, சான்ருண்மை, என்று படிப்படியாக வேறு வேறு பெயர்களில் சொல்லியிருக் கிருர்கள். நாம் இதையே புதுப் பெயர் சூட்டிப் பொதுவாகக் 'காட்சிக்கு எளிமை' என்று அழைப்போம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/10&oldid=825859" இலிருந்து மீள்விக்கப்பட்டது