பக்கம்:சிந்தனை மேடை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

直{} மெய்யான கெளரவம் நல்ல மனமும் பொய்க் கலப்பில்லாத துாய எண்ணங்களும்தான். அவற்றை ஆளும் தன்னம்பிக்கை நமக்கு இருக்குமானல் நம்மைப் பிறர் மதிக்க வேண்டுமே என்ற ஆசையைக் கூட நாம் தியாகம் செய்ய முடியும். அப்படித் தியாகம் செய்கிற வைராக்கியம் நம்மில் சிலருக் காவது வேண்டும். அரியணையேறி அரசாளும் மாபெரும் மன்னர்கள் கூடக் காட்சிக்கு எளியராய் இருக்க வேண்டுமென்றுதான் திருவள் ளுவர் கூறுகிரு.ர். தனக்கு முன்னல் வந்து சிரித்துக் கொண்டு குழைந்து திற்கிற அத்தனை ப்ேரும் ஏதோ உதவியை எதிர்ப்பார்த்துத் தான் குழைகிருர்களோ என்று பயந்து பதிலுக்கு மலரவோ, சிரிக்கவோ, முடியாமல் கல்லாகி விடுகிற சிலரைக் கண்களின் எதிரே பார்க்கும்போது எனக்கு மிகவும் பரிதாபமாயிருக்கும். "மலர்ந்தால் எவரேனும் பறித்துக் கொண்டு போய் விடு வார்களோ’-என்று பயந்து எந்தப் பூவும் மலர்ந்து மணக் காமல் அரும்பாகவே இருந்து விடுவதில்லை. பூக்களைப் போல எல்லார்க்கும் எங்கும் எப்போதும் மலர்ந்து மணக்கும் * காட்சிக்கு எளிமையே ஒரு கெளரவம். இதைத் தவிர மற்ற வற்றைக் கெளரவங்களாக நினைத்து இப்படி மலர்ந்து மணக் கக் கூசுவதுதான் அகெளரவம் என்பது என்னுடைய துணிந்த கருத்து. இதையே வேருெரு விதமாகக் கூற வேண்டு மாளுல், சுக்குப் போல எளியதாய் எல்லார்க்கும் எல்லா இடத்திலும் கிடைக்கிற தொண்டு தான் காட்சிக்கு எளிமை . சமுதாய நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் இதை மறப்பதற் கில்லை. நம்முடைய எளிமையே நமக்குப் பலம். நம்முடைய து.ாய்மையான நம்பிக்கைகளிளுல் நாம் எதையும் சாதிக்க முடியும் என்ற துணிவுடன் கண்முன் தெரிகிற எல்லாருடைய துக்கங்களுக்கும் மனம் கசிந்து இரங்கியபடியே நாம் கைவீசி நடக்க வேண்டும். இதைவிடப் பெரிய உபகாரமாக இந்த உலகத்துக்கு நாம் வேறென்ன செய்துவிட முடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/12&oldid=825863" இலிருந்து மீள்விக்கப்பட்டது