பக்கம்:சிந்தனை மேடை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரயில் உறவுகள் குறுக்கு வழியாகச் சென்னை எழும்பூர் செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் நேர்வழியாக ஏறுவதற்குக் கூட் டம் இடம் தரவில்லையாதலால் சன்னல் வழியாகச் சாமான் களையும், பெட்டி படுக்கையையும் தள்ளி விட்டுப் பின் என் 3னயும் ஒருவிதமாக உள்ளே திணித்துக் கொண்டு நிம்மதியாக ஒன்றிரண்டு தரம் மூச்சு விட்டுக் கொள்ளலாமென்று தலை திமிர்ந்தேன். நிமிர்ந்த தலை குனியும்படி மேலேயிருந்து ஒரு .م o மில்லாமல் அப்பர் பெர்த்தில் காலே நீட்டிக் கொண்டு உட் w கார்ந்திருத்த மனிதர் ஒருவர், என்ன சார் உங்களைப் போல விகரந் தெரிந்தவர்களே இப்படிச் சன்னல் வழியாக ஏறினுல் தள்மு:விருக்கிறதா?’ என்று நேர்மையின் பிரதிபிம்பமாக மாறி என்னைச் சாடுவதற்குத் தொடங்கிஞர். " அப்பர் சுவாமிகளே! (அப்பர் பெர்த்தில் இருப்பவர் களேக் கூற நான் கண்டு பிடித்திருக்கும் மரியாதைத் தொடர் இது. நீங்கள் கூறியதில் எனக்கு மகிழ்ச்சியளிக்கிற ஒரே அம்சம் என்னே விவரந் தெரிந்தவன்” என்று நீங்களாகவே பார்த்தவுடன் ஒப்புக் கொண்டதுதான். ஏனென்ருல் என்ன வெகுநாட்களாகப் பார்த்துப் பழகி எல்லா வகையிலும், உறவு பூண்டவர்களும் சொல்லத் தவறிய வார்த்தையாகும் அது!’ என்று கிண்டலில் இறங்கினேன். அடியேனுடைய கிண்டல் அப்பர்’ சுவாமிகளுக்குப் புரிந்துவிட்டது போலும். 'நல்லதைச் சொல்ல வந்தால் கிண்டல் பண்ணுகிறீர் களே சார்! நேர்வழி இருக்கும் போது...” 'தப்பு சுவாமி! நேர்வழி என்பது இந்த எக்ஸ்பிரசுக்குக் கிடையாது. இது குறுக்கு வழியாகச் சென்னை எழும்பூர் செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்' அல்லவா?’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/13&oldid=825865" இலிருந்து மீள்விக்கப்பட்டது