பக்கம்:சிந்தனை மேடை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘4 பாகிச் செல்ல வேண்டுமென்பது என் ஆசை. பெட்டியை பும் படுக்கையையும்தான் தீராப் பட்சமாகச் சுமக்க வேண்டி யிருக்கிறது. பெட்டி படுக்கைகளைத் தவிர ஒரு பெரிய பங் களாவையும், வழக்கமான செளகரியங்களையும் போகிற இடத்துக்கும் அப்படியே சுமந்துகொண்டு போவதுபோல் ரேயாணம் போகிறவர்களேக் கண்டால், ஐயோ பாவும்! கைதிகள்!” என்று சொல்லத் தோன்றும். பிரயாணத்தின் போது அதிகமான சுமைகளே அதிகமான கவலைகள். அதிகச் சுமைகளோடு பிரயாணம் போகிறவர்களுக்குப் புறப்படும் போதும் கவலை போய்ச் சேர வேண்டிய இடத்தில் போய் இறங்கும்போதும் கவலே. புறப்படும்போது எல்லாச் சாமான் களே யும் ஏற்றியாயிற்ருே இல்லையோ என்று கவலே. போய்த் சேர்ந்த பின்பு ஏற்றிய எல்லாச் சாமான்களேயும் ஒன்றுவிடா மல் இறக்கியாயிற்டுே, இல்லையோ என்று கவலே. எந்த விதத்திலுமே கவலையில்லாமல் இசயில் பயணத்தை அதுபவிக்க வேண்டுமானல் நம்மைச் சுற்றியோ தம் மனத் தைச் சுற்றியோ சுமைகளோ, பாரமோ இருக்கலாகாது. இரயிலின் பல கணிக்கு அப்பால் தென்பட்டு விரைகிற ஒவ் வொரு மரத்தையும், செடியையும், கொடியையும், தந்திக் கம்பத்தையும், ஒவ்வோர் அற்புதமாகவும், அதிசயமாகவும் பாவித்துக்கொண்டு புதிய ஆர்வத்தோடு அவற்றைக் காணும் உல்லாசமானஉள்ளம் நமக்கு வேண்டும் பயணத்தை இரசிப் - பதற்குஇ நல்ல வழி. வழக்கமான உணவு, வழக்கமான செளகரியங்கள், இவைகளே ஒரளவு விட்டுக் கொடுத்தால்தான் இரயில் பய ணத்தில் சுகம் காண முடியும். நம்முடைய இரயில் பயணத் தில் போகிற வழியில் நமக்கு என்னென்ன கிடைக்குமோ, அவற்றைக் கொண்டு நம் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். நமக்கு என்னென்ன கிடைக்க வேண் -டுமோ அவையெல்லாம் கிடைக்கவில்லையே என்று கிடைக் காதவற்றை எல்லாம் எண்ணி ஏங்கக் கூடாது. போய்க் கொண்டிருக்கிற வழியில் என்னென்ன கிடைக்குமோ அவற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/16&oldid=825871" இலிருந்து மீள்விக்கப்பட்டது