பக்கம்:சிந்தனை மேடை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 றைக் கொண்டு திருப்திப் படுவதும், என்னென்ன கிடைக்க வில்லையோ அவற்றை நினைத்து அதிருப்திப் படாமையும்தான் இரயில் பயணம் சுவாரசியமாக அமைவதன் இரகசியம். இந்த இரகசியத்தைத் தெரிந்துகொண்டு பயணம் செய்தால் ஒவ்வொரு பயணமும் ஒர் உல்லாச யாத்திரைதான். நாள் கணக்கில் சென்னையிலிருந்து, டில்லி, கல்கத்தா, பம்பாய் போன்ற நீண்ட தொலைவிலுள்ள நகரங்களுக்குப் பயணம் செய்கிறவர் கள், பயணம் முடிந்து இரயிலிலிருந்து கீழே இறங்கும்போது குடித்தனம் மாற்றிக் கொண்டு வேறு வீட்டுக்குப் போவது போன்ற உணர்ச்சியை அடைந்திருப்பார்கள். ஜி.டி. நாயுடு போன்ற விஞ்ஞான மேதைகள் ஒரு பெரிய புத்தகத்தைப் படித்து முடிப்பதற்காகவே நீண்ட பயணம் ஒன்றை ஏற் படுத்திக் கொள்வது உண்டாம். சிலருடைய மனப்பான் மைக்குப் பிரயாணத்தின்போது படிப்பது மிகவும் பிடிக்கும். இன்னும் சிலருடைய மனப்பான்மை பிரயாணத்தின்போது பிரயாணத்தைத் தவிர வேறு எதையும் படிக்கக் கூடாது என்பது போல இருக்கும். இவர்களைத் தவிர வேறு சில விநோதமான பிரகிருதிகளும் உள்ளனர். பிரயாணத்தின் போது புத்தகங்களையும், பத்திரிகைகளையும் ப்டிப்பதைத் தவிர தங்களுக்கு வேறு எதுவுமே வேலை இல்லை’ என்று சக பிரயாணிகள் கற்பனை செய்துகொள்ளும் அளவுக்கு ஒவ் வொரு நிலையத்தில் இரயில் நிற்கும்போதும் பரபரப்போடு புத்தகங்களும் பத்திரிகைகளும் வாங்கிக் குவித்துக்கொண் டிருப்பர். ஆனால் ஒன்றைக்கூடப் படிக்கமாட்டார்கள். படிப்பதற்குப் பொறுமையும் இருக்காது இவர்களுக்கு. அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் இரவல் கேட்டாலும் கொடுப் பதற்குச் சிரமப்படுவார்கள். - இன்னும் சிலர் இரயில் பயணத்தை வேறு விதமாக அநுபவிப்பார்கள். உரித்து ஒவ்வொரு சுளேயாகச் சாப்பிடு வதற்கு ஏற்ற பழங்களை வாங்கிப் பக்கத்தில் குவித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/17&oldid=825873" இலிருந்து மீள்விக்கப்பட்டது