பக்கம்:சிந்தனை மேடை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 'தங்கள் சுற்றமும் உறவும் புடைசூழ வந்து மண மக்களை வாழ்த்துமாறு வேண்டுகிருேம்’ என்று நூறு ஆண்டு களுக்கு முன்னல் எப்படித் திருமண அழைப்பிதழ் விடுத்தார். களோ, அப்படித்தான் இன்றும் அழைக்கிருர்கள். அந்தக், காலத்தில் அப்படி அழைத்ததற்கு ஏற்பச் சுற்றமும், உற: ம்ை, புடைசூழ நான்கு தாட்கள் முன்பாகவே வந்து தங்கி மணமக்களை வாழ்த்திக் கொண்டிருந்தார்கள். இப் போது அழைப்பிதழ்களில் இப்படிப்பட்ட தொடரைப் பார்க்கும் போது நமக்கே சிசிப்பு வருகிறது. திருமணமே சில மணி நேரத்துக்குள் நடந்து முடிந்து விடுகிற அவசரச் சடங்காகி மணமக்களே வேறு வேறு ஊர்களிலிருந்து திரு மணத்துக்கு முதல் நாள்தான் ரயிலில் வந்து இறங்குகிருர் கண் என்று சொல்வதற்கு ஏற்ற சூழ் நிலையில் இப்படி அழைப் பதும் வெறும் சடங்காகிப் பொருளற்று நிற்கிறது. இதே சமயத்தில் புதிய சூழ்நிலைக்கு ஏற்ப நாம் உண்டாக்கிக் கொண்டிருக்கும் சில சடங்குகளைப் பற்றியும் சற்றே சிந்திக்க &Ufrtfi. - "ஒருவர் தலைமை வகித்துப் பொதுக் கூட்டம்போல் சிலர் மணமக்களே வாழ்த்தி மைக்’கில் பேசுகிற புதிய திருமண முறையில் சடங்குகளே இல்லை’ என்று நீங்கள் கூறி ஞல் அதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். இந்தப் புது முறையிலும் சடங்குகள் உண்டு. ஆளுல் இவை நாகரிக மாக மாற்றப்பட்டிருக்கின்றன. மேசை, நாற்காலி, மைக், சொற்பொழிவாளர்கள், மாலை எலுமிச்சம்பழம் என்று: எவ்வளவோ பொருள்கள் இந்தப் புதுமுறைச் சடங்குக்கும். வேண்டுமே! - - குத்துவிளக்கேற்றிக் கொட்டு மேளம் முழங்க முத்துப் பந்தலின் கீழ் முது மக்கள் நின்று வாழ்த்திட நிகழ்ந்த திரு. மணம், சினிமா பிள்ேட் சங்கீதம் அலறக் கண்ணுடிச் சட்ட மிட்ட அடுக்குமொழி அலங்கார வாழ்த்துக்கள் படிக்கப் பெற, மின்சார வண்ண விளக்குகள் தேவைக்கும் அதிகமாக வெளிச்சம் போட, இன்று புது விதமாகவும் நடை பெறு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/20&oldid=825879" இலிருந்து மீள்விக்கப்பட்டது