பக்கம்:சிந்தனை மேடை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. கிறது. இந்தப் புதுமுறைத் திருமணத்தில் சடங்குகள் இல்லை என்று சொல்ல முடியுமா? பழைய சடங்குகள் இல்லை என்று வேண்டுமாளுல் சொல்லலாம். சடங்குகளே இல்ல்ை என்று நிச்சயமாகச் சொல்லமுடியாது. தரை மட்டத்துக்கு வெட்டி விட்டாலும் முறிந்து கீழே மீதமிருக்கிற அடிமரத்தி விருந்து தளிர்க்கிற சில தாவர இனங்களைப் போன்றவை தாம் சடங்குகள். பழையவற்றில் காரணம் எதுவும் நமக் குப் புரியவில் ைஎன்பதற்காகச் சிலவற்றை மூட நம்பிக்கை என்று ஒதுக்குவோம். இன்றைய நிலைக்கு மட்டும் காரணம் புரிவதாயிருக்கிற சில புதிய சடங்குகளே மேற்கொள்ளத் தொடங்கி விடுவோம். இந்தப் புதிய சடங்குகளின் காரண மாக தாம் அறிந்து கொண்டவற்றில் நமக்கே நம்பிக்கை குறையும்போது இள்ையும் மூட நம்பிக்கைகளாகி நம்மை: ஏமாற்றி விடுகின்றன. ஒப்புக்காக நமக்கு நம்பிக்கையின்றிப் பிறர் வற்புறுத்த&வத் திருப்திப்படுத்துவதற்காக நாம் செய்கிற காரியங்களெல். லாம் ஒப்புக்காகச் செய்பவை என்ற பிரிவிலேயே அடிங், கும். இப்படி நம்பிக்கையின்றிச் செய்கிற காரியங்களைக் குறிக்கத் தான் மூட நம்பிக்கை’ என்ற தொடரை நாம் பல வேளைகளில் பயன்படுத்துகிருேமேயன்றி வேறு பொருளில் அன்று. - உங்களுக்கு எந்த விதமான உடல் நலக் குறைவுமின்றிப் பார்ப்பதற்கு நீங்கள் சோர்வாகத் தென்பட்டுக் கொண் டிருக்கிற சமயம் ஒன்றில் உங்கள் நண்பர்கள் உங்களை "நீங்கள் மிகவும் பலவீனமாகத் தெரிகிறீர்கள். ஏதாவது வைத்தியம் செய்து கொள்ளுங்கள்’’ என்று வற்புறுத்த லாம். சரியான உணவு இன்மை, சரியான தூக்கம் இல்லாமை, இரண்டும் நமது சோர்வுக்குக் காரணம் என்று உங்களுக்குப் புரிந்திருந்தும் நீங்களே அதை மறந்துவிட்டு ஒரு டாக்டரிடம் உடம்பைக் காண்பித்துக் கொண்டு பே ைத.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/21&oldid=825881" இலிருந்து மீள்விக்கப்பட்டது