பக்கம்:சிந்தனை மேடை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笼鱼 செயல் துணிவு ஒரு செயலைத் துணிவாகச் செய்வதற்கு வேண்டிய நம்பிக்கைதான் பக்தி என்று சொன்னுல் அதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் செயலில் நம்பிக்கை இல்லாமல் ஏளுே. தானே வென்று செயல்படுகிறவனேக் கூட நாஸ்திகன் என்று சொல்லலாம்தானே? நாகரிக உலகத்தில் ஏனே தானே. என்று இருப்பதுகூட ஒரு கெளரவமான சடங்கு என்று நினைக் கப்படலாம். ஆனல் அப்படி இருப்பவன் மன்னிக்கப் படுவதில்லை. பொறுப்பும், உணர்ச்சியும், நியாயமும், நிஜ மும், தெரியாதவனுக இருப்பதுதான் மூட நம்பிக்கை. அவை தெரிந்தவனக இருந்து அவற்றை மதிக்கிறவன் காரணமில்லாத பழைய சடங்குகளை விட்டு விட்டாலும் அவ்: குல் கெடுதல் இல்லை. பழைய சடங்குகளையும் மதிக்காமல், புதியவற்றிலும் பொய்யான சடங்குகளே மட்டுமே மதிக்கப் பழகிக் கொண்டிருக்கிற செயல் துணிவில்லாதவன் எவனுே அவன்தான் இன்றைய சமூகத்தில் பரிதாபத்துக்குரியவனுகி நிற்கிற பேதை ஆவான். பத்துப் பேர் செய்யக் கூசி நிற்கி ருர்கள் என்று அந்தப் பத்துப் பேருக்குப் பயந்து பதினுென்ரு: மவகை நிற்கிற ஒருவனும் ஒரு நியாயமான காரியத்தைச் செய்ய நாணி நிற்கும் நிலையை இன்றைய பொதுவாழ்வில் அதிகமாகப் பார்க்கிருேம். நல்லதைச் செய்யக் கூகி நிற்பது தான் இங்கே மூடநம்பிக்கை. இந்த விதமான நாகரிக தாணம் எவ்வளவு புதியதாக இருந்தாலும் முதலில் ஒழிக்க வேண்டிய மூடநம்பிக்கை இதுதான். முதலில் தவிர்க்க வேண்டிய போலிச் சடங்கும் இதுதான். நியாய உணர்ச்சி யும், பிறருக்கு உபகாரம் செய்யக் கூசாமல் முந்தும் கருணை யும் சமுதாயத்தின் பொது நிதிகள். அவை இல்லாமல் குறைந்து போய்விட்ட பொது வாழ்வு எதுவோ அதுதான் மூடநம்பிக்கை மண்டியதாக இருக்கும். பழையவற்றை விட்டு விடுவது, புதியவற்றைக் கடைப்பிடிப்பது, கொள்கை கண் வேகம் நிறைந்த தாக்கிக் கொள்வது, என்று இவை தாம் நல்ல பக்குவமான சீர்திருத்த வாழ்வு என்று திண்ணப்பதற்குப் பதில் நியாய உணர்ச்சியும் கருணையும் கெட்டு சி. மே. இ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/23&oldid=825885" இலிருந்து மீள்விக்கப்பட்டது