பக்கம்:சிந்தனை மேடை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3) தியானம்' கிருஷ்ணத் தியானம்’ என்ற இருவகைகளில் சுக் கிலத் தியானம் ஒளிமயமாகச் சிந்திக்கப் பழகுவது. கிருஷ் ணத் தியானம் இருள்மயமாகச் சிந்திக்கப் பழகுவது. இருள் மயமாகச் சிந்திக்கும் சோர்வு மனப்பான்மை வந்து விட்டால் ஞானியும் பாமரனகி விடுவான். அவனுக்கு மன நலமும் அதல்ை வருகிற ஆக்கமும் இல்லை. வாழ்க்கையில் நாம் பெறவேண்டிய வளங்களில் சிறந்தவை திட்டமிட்ட ஒழுங்குகளும், ஆக்கமயமான சிந்தனைகளும்தான். இந்த இரண்டுமே மனிதனுடைய மனத்தை நிறைவாக வைத்துக் கொண்டிருப்பவை என்பதை உணர வேண்டும். சமுதாய நம்பிக்கை மனிதர்களின் தனித்தனி ஆசைகளாலும், தனித் தனி நம்பிக்கைகளாலும் விளைகிற பயன்கள் அந்த மனிதனுக்கும் அவன் குடும்பத்துக்குமே சேரும். ஆளுல் இத்தகைய நம்பிக் கைகளால் மொத்தமான சமுதாயப் பயன் எதுவும் ஏற்பட முடியாது. ஒரு நகரமோ, நாடோ, மக்கள் இனமோ முன் னேறுவதற்கு ஒன்றுபட்ட சமுதாய நம்பிக்கை வேண்டும். ஒல்வொரு மனிதனுடைய திட்டமிட்ட வாழ்விலும், திட்ட மிட்ட சிந்தனைகளிலும் ஒரு பகுதி பொதுவான சமுதாய நம் பிக்கைக்குப் பயன்பட வேண்டியது அவசியம். ஒரு தனி மனி தனுடைய வாழ்க்கை நன்ருக இருப்பதற்கு ஒளிமயமான சிந்தனேகளும், கட்டுப்பாடுகளும் எவ்வளவுக்கு வேண்டுமோ அவ்வளவுக்குப் பொது வாழ்வு நன்ருக இருப்பதற்குப் பல தனி மனிதர்களின் சமுதாய நம்பிக்கை வேண்டும். நான் வளமாக வாழ வேண்டும்’ என்று மட்டும் ஆசைப்படுவது என்னுடைய சொந்த வாழ்க்கை நம்பிக்கை. எல்லாரும் வளமாக வாழ வேண்டும்’ என்று என்னையும் அதில் சேர்த் துக் கொண்டு பொதுவாக ஆசைப்படுவது சமுதாய நம் பிக்கை. இந்த நூற்ருண்டில் சராசரி மனிதனுடைய திருப்தி இந்த இரண்டு நம்பிக்கைகளையும் பொறுத்ததாகவே இருக்கிறது. சமுதாய நம்பிக்கை சிறிதுமே இல்லாதவனு டைய சுகம் பல பேர்களுடைய தாக்குதலுக்கு ஆளாகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/31&oldid=825903" இலிருந்து மீள்விக்கப்பட்டது